பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்ணிணைப்பு

129

ஸ வழங்கிவருவதாகத்

கடற்பறவையையுங் குறிப்பன. அவற்றின் திரிபான ஹம்ஸ என்னும் கீழையாரியச் சொல்லே, ஓதிமத்தின் பெயராக தெரிகின்றது. swan என்பது ஆங்கிலச் சொல்.

ஒருசில சொற்கள் தூய தென்சொல்லாயினும், வடமொழி வெறியரான தமிழ்ப்பகைவரால் வடசொல்லொடு தொடர்புபடுத்தப்படுகின்றன.

எ-டு.

flagi;

தானை = சேலை, துணி, துணிக்கொடி பிடித்துச்செல்லும் படை. ஒ. நோ: தூசு = துணி, துணிக்கொடி. தூசு - தூசி = கொடிப்படை. E. colour colours = regiment.

பார்ப்பான் பார் – பார்ப்பான் = நூல்களைப் பார்ப்பவன், அந்தணர் என் னும் வகுப்பில் இல்லறத்தான், ஆசிரியன் அல்லது உவச்சனாகப் பணியாற்று பவன். இச் சொற்கும் பிராமணன் என்னும் சொற்கும் இடைப்பட்ட தொடர்பு இயேசு கிறித்து என்னும் பெயருக்கும் கேசவக் கிருட்டிணன் என்னும் பெய ருக்கும் இடைப்பட்டதே.

சிலர் பார்ப்பனன் என்னும் வடிவு பிராமணன் என்பதன் திரிபைக் காட்டு மென்பர். அவர் அறியார். அனன் என்னும் சாரியை கூடிய ஈறு, படர்க்கை ஐம் பால் மூவிடத்திற்கும் பொதுவானதே.

எ-டு

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

பார்த்தனன்

பார்க்கின்றனன்

பார்ப்பனன்

பார்த்தனள்

பார்க்கின்றனள் பார்ப்பனள்

பார்த்தனர்

பார்க்கின்றனர் பார்ப்பனர்

பார்த்தன்று

பார்க்கின்றது

(பார்ப்பனது)

பார்த்தன

பார்க்கின்றன

பார்ப்பன

பார்த்தன்று என்பது பார்த்தனது என்பதன் தொகுத்தல். பார்த்து +

அன் + அது = பார்த்தனது . அனது - அன்று (அன் + து).

OE. nama, E. name, OS, OHG. namo, Goth. namo, L. nomen, நாம (இ.வே.)