பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

திருக்குறள்

தமிழ் மரபுரை





134

அதி:

திருக்குறள்

தமிழ் மரபுரை

அதித்தல் = வீங்குதல், பருத்தல், மிகுதல், இவ் வினை இன்று வழக்கற்றது.

அதி + இகம் = அதிகம் - அதிகன் = மிக்கோன், இறைவன். அதி + அனம் அதனம் = மிகுதி. அதி - அதை, அதைத்தல் வீங்குதல். அதி - அதி (வ.)

=

அதிகாரம்: கடு - கடி கரி - காரம் மிகுதி, கடுமை, உறைப்பு, வலிமை. அதிகரித்தல் (மீமிசைச் சொல்) மிகப் பெருகுதல். அதிகரி - அதிகாரம் = மிகுதி, வலிமை, கையாளும் உரிமை, ஆளும் வலிமை, நூலின் பெரும்பகுதி. அதி, கரி, அதிகரி என்னும் மூவினைகளும் வடமொழியிலில்லை. அதி க்ரு (செ-) என்று சொற்புணர்த்தித் தலைமையாயிருத்தல் என்று பொருள் புணர்ப்பர். அதிகாரம் - அதிகார

(61.)

அமர்:

+

=

அம்முதல் பொருந்துதல். அம் - அமர். அமர்தல் = பொருந்துதல். அமர் பொருந்திச் செ-யும் போர். ஒ. நோ: பொருதல் = பொருந்துதல், போர் செ-தல். அமர்த்தல் = போர் செ-தல், வலிமை கொள்ளுதல், செருக்குதல். அம் - சம் - சமம் (போர்) - சமர் - சமரம் - ஸமர (வ.).

அமரகம்:

அமர் போர். அகம் இடம். அமரகம் போர்க்களம்.

அமிழ்தம்:

11 ஆம் 64ஆம் குறளுரைகளைப் பார்க்க.

அமைச்சு:

அமைத்தல் = பொருத்துதல், ஏற்பாடு செ-தல். அமை அமைச்சு அரசியல் முறையையும் வினைகளையும் செவ்வையாக அமைத்தல், 'சு' தொழிற்பெயரீறு. ஒ. நோ: விழை - விழைச்சு. அமைச்சு அமைச்சன், வேந்தன் என்னும் பெயர் வேந்து என்று குறுகுவதுபோல, அமைச்சன் என்னும் பெயரும் அமைச்சு என்று குறுகி வழங்கும்.

இனி, அண்மையிலிருப்பவன் என்று பொருள்படும் அமாத்ய என்னும் வடசொல்லொடு தொடர்புடையதாகக் கொள்ளினும், அப் பொருளிலும் இச்