பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்ணிணைப்பு

=

153

வரன்: புரம் உயர்ச்சி, உயரமான கட்டடம். கோபுரமுள்ள நகர். கோபுரம் அரசனிருக்கும் உயரமான கட்டடம், உயரமான காவற் கூண்டு.

=

||

"புரையுயர் பாகும்."

(தொல். 785)

புரம் - பரம் = மேலுலகம். பரம் - வரம் - வரன் = மேலான வீட்டுலகம்.

வலம், வலி: வல், வலம், வலி. வலம் பல (வ), L. valere. வகரம் பகர மாகத் (b) திரிந்துள்ளது வடசொல்லின் பின்மையைக் காட்டும்.

வாணிகம்: பண்ணுதல் = செ-தல், உண்டாகுதல், விளைவித்தல். பண் பண்ணியம் = பல்வேறு விற்பனைப் பண்டம்.

பண்ணியம் - பண்ணியன் - பண்ணிகன் - பணிகன் - வணிகன் - வணி கம். வணிகன் வாணிகன் வாணிகம் வாணிபம். வாணிகன் வாணியன். வணிகன் - வணிகு. வணிகு வணிஜ் (வ.), வணிகன் -

வணிஜ (வ.).

விக்குள்: விக்கு

விக்கல்

விக்குள் (ஒலிக்குறிப்புச்சொல்). விக்கல்

ஹிக்கா (வ.), E. hiccup. hiccough. இவ் வொலிக்குறிப்புச்சொல் குமரிநாட் டிலேயே தோன்றிவிட்டது. ஆதலால் அதன் திரிபே ஆங்கிலச் சொல்லும் வடசொல்லும்.

வித்து: வித்து - விதை. விதை - வீஜ, பீஜ (வ.)

வியம்: விள்ளுதல் = விரிதல். விள் - (வி-) - வியம் = விரிவு, வியம் வியன் - வியல் = அகலம்.

“வியலென் கிளவி யகலப் பொருட்டே.”

வியம் -வியத் (வ.).

·

(தொல். 847)

விழி: விழித்தல் = கண் திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = கண், பார்வை, அறிவு, ஓதி (ஞானம்). விழி.

L. vide, Gk. (W) oida, Skt. vid, OE.,OS., witan, OHG. wizzan, ON. vita, Goth. witan.

வெஃகு: விள் - விர் (விரு - விரும்பு. விள் - வெள் - வெண்டு - வேண்டு வெள் வேள் வேண் = விருப்பம். வேண்டுதல் = விரும்புதல், விரும்பியிரத்தல். வெள் - வெள்கு - வெஃகு, வெஃகுதல் = விரும்புதல், பேராசைகொள்ளுதல், பிறர் பொருளை விரும்புதல். வெஃகு - க. பேக்கு = வேண்டு E. beg.