பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்ணிணைப்பு

159

கபிலர்

5. தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி.

(பொ-ரை.) வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட் டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம், புல் நுனிப் பனித்துளி பனை வடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.

பரண ர்

6. மாலுங் குறளா- வளர்ந்திரண்டு மாணடியான்

ஞால முழுது நயந்தளந்தான் – வாலறிவின்

வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா

ருள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து.

(பொ-ரை.) திருமால் குறளா-த் தோன்றித் தன் இருபேரடியால் உலகனைத்தையும் அளந்தான்; ஆனால், திருவள்ளுவர் தம் குறளின் இரு சிற்றடியால் மாந்தர் கருத்தனைத்தையும் அளந்தார்.

நக்கீரர்

7. தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா லானா வறமுதலா வந்நான்கு – மேனோருக்

கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்

வாழியுல கென்னாற்று மற்று.

(பொ-ரை.) தாமே எல்லாவற்றையும் அறிந்து, நாற்பொருளையுங் குறள் வெண்பாவால் எல்லார்க்கும் எளிதாயறிவித்த திருவள்ளுவர்க்கும் மழை பொழியும் முகிலுக்கும் உலகம் என்ன கைம்மாறு செ-யவல்லதாம்?

மாமூலனார்

8. அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் றிறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்

வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வா-ச்சொற் கொள்ளா ரறிவுடை யார்.