பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்ணிணைப்பு

நாகன்தேவனார்

161

12. தாளார் மலர்ப்பொ-கை தாங்குடைவார் தண்ணீரை

வேளா தொழிதல் வியப்பன்று - வாளாதா

மப்பா லொருபாவை யா-பவோ வள்ளுவனார்

முப்பால் மொழிமூழ்கு வார்.

(பொ-ரை) தாமரைக் குளத்திற் குளிப்பார் பிற குளத்தை விரும்பார். அது போல், திருவள்ளுவரின் திருக்குறளைக் கற்றார் பிற நூல்களை விரும்பார்.

அரிசில்கிழார்

13. பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு

தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய

சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்

வல்லாரார் வள்ளுவரல் லால்.

(பொ-ரை.) விரிவுபட்டுக் கிடக்கும்

யெல்லாம் ஒழுங்காகக் கூறுபடுத்திச்

வல்ல வர்வள்ளுவரன்றி வேறு யார்?

வெவ்வேறு

சுருங்கச்சொல்லி

பொருள்களை விளங்கவைத்தலில்

பொன்முடியார்

14. கானின்ற தொங்கலா- காசிபனார் தந்ததுமுன் கூநின் றளந்த குறளென்ப - நூன்முறையான் வானின்று மண்ணின் றளந்ததே வள்ளுவனார் தாநின் றளந்த குறள்.

(பொ-ரை.) மாலையணிந்த அரசே! முன்பு காசிபன் தந்த குறள் மண்ணில் நின்று உலகத்தை அளந்தது; இன்று திருவள்ளுவர் தந்த குறள் மண்ணிலும் விண்ணிலும் நின்று உலகத்தை யளந்தது.

கோதமனார்

15. ஆற்ற லழியுமென் றந்தணர்க ணான்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதா - ரேட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.

(பொ-ரை.) பிராமணர் நால்வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற் றின் வலிமை கெடுமென்று வா-ப்பாடமாகவே சொல்லிக் காத்துவருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறைதலில்லை.