பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்ணிணைப்பு

167

(பொ-ரை.) நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப் பட்ட நால்வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால், அவற்றை யெளிதாயுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார்

34. புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேற்

சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு

பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றுங்

கறங்கிருண்மா லைக்கும் பெயர்.

(பொ-ரை.) திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவரென்று சமமாகச் சொல்லுதல், முழுமதி மாலையையும் காருவா அமாவாசை மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லாற் குறிப்பது போலும்.

மதுரை யறுவைவாணிகன் இளவேட்டனார்

35. இன்பமுந் துன்பமு மென்னு மிவையிரண்டு

மன்பதைக் கெல்லா மனமகிழ -வன்பொழியா

துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர்

வள்ளுவர் வாயுறை வாழ்த்து.

(பொ-ரை.) மக்களெல்லாரும் தமக்கு வரும் இன்ப துன்பக் கரணியங் களை யறிந்து துன்பத்தினின்று தப்பி யின்புறும்பொருட்டு, திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை வாழ்த்தாகப் பாடினார்.

வாயுறை வாழ்த்தாவது, முன்பு வெறுப்பை விளைப்பினும் பின்பு நலம் பயக்கும் நன்மருந்துபோற் பயன்படும் அறிவுரை வாயுறுத்தும் மருந்து.

கவிசாகரப் பெருந்தேவனார்

36. பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனத

மாவிற் கருமுனியா யானைக் - கமரரும்பல்

தேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே

பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

(பொ-ரை.) பூவிற்குத் தாமரையும், பொன்னிற்கு நாவற்சாறமும், ஆவிற்குக் காமதேனுவும் யானைக்கு ஐராவதமும். தேவிற்குத் திருமாலும், நூலிற்குத் திருக்குறளும் சிறந்தனவாம்.