பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

திருக்குறள்

தமிழ் மரபுரை

இனி அமர்த்தல் மாறுபடுதல் என்றுகொண்டு கண்கள் பெண்டன்மை யொடும் பேதைமையொடும் பொருந்தாது மாறுபட்டிருந்தன எனினுமாம். 'கண்', பால்பகா அஃறிணைப்பெயர். பேதை யென்னுஞ்சொல் இங்குப் பருவங் குறியாது இளமை குறித்து நின்றது.

1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர னோக்கமிம் மூன்று முடைத்து.

(இதுவுமது.)

(இ-ரை.) கூற்றமோ என்னைக் கொல்வதுபோல வருத்துவதாற் இடையிடை மருண்டு பார்ப்பதாற் பெண்மானோ;

காலனோ; பிணையோ

கண்ணோ இவ் விருதன்மையும் இல்லாது சில வேளைகளி லிருப்பதால் இயல்பான மாந்தக்கண்தானோ; மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து ம் இப் பெண்ணின் பார்வை இம் மூவகைத் தன்மையும் உடையதாயிருக்கின்றது.

மேற்கூறிய கொல்லுந் தன்மையோடு வேறிரு தன்மைகளும் உை மை இங்குக் கூறப்பட்டது. 'கூற்றம்', 'கண்', 'பிணை' என்னும் மூன்றும் ஆகு பொருளன. 'மடவரல்' ஆகுபெயர். இதில் வந்துள்ள அணி ஐயவுவமை.

1086.

காடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர் செ-யல மன்னிவள் கண்.

(இதுவுமது.)

(இ-ரை.) கொடும்புருவம் கோடா மறைப்பின் அருகிலுள்ள வளைந்த புருவங்கள் நேராக விருந்து மறைக்குமாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செ-யல - இவள் கண்கள் நான் நடுங்குதற்கேதுவான துன்பத்தைச் செ-ய மாட்டா.

இயல்பாகக் கொடிய புருவங்கள் தம் நேர்மையில்லாத் தன்மையால், தமக்கருகிலுள்ள கண்கள் எனக்குக் கடுந்துன்பஞ் செ-வதைத் தடுக்காது போயின, என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைப் பொருளது. ‘புருவம்', 'கண்' பால்பகா வஃறிணைப் பெயர்கள்.

1087.

கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில்.

அவள் முலைகளினாலான வருத்தங் கூறியது.)