பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்ணிணைப்பு

171

குலபதி நாயனார்

48. உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள

தள்ளற் கரியவிரு டள்ளுதலால் - வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரு மொக்குமெனக்

கொள்ளத் தகுங்குணத்தைக் கண்டு.

(பொ-ரை.) நெஞ்சத் தாமரையை விரியச்செ-து அகவிருளை நீக்குந் திருக்குறளும், நீர்த்தாமரையை விரியச் செ-து புறவிருளை நீக்கும் கதிரவ னும், குணத்தால் ஒக்குமென்று கொள்ளத்தகும்.

தேனீக்குடிக் கீரனார்

49. பொ-ப்பால பொ-யேயா-ப் போயினபொ- யல்லாத மெ-ப்பால மெ-யா- விளங்கினவே - முப்பாலில் தெ-வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்

வையத்து வாழ்வார் மனத்து.

(பொ-ரை.) தெ-வப் புலமைத் திருவள்ளுவனாரின் திருக்குறளைக் கற்று அல்லது கேட்டு அறிந்ததனால், மக்கள் மனத்தில் மெ-த்தன்மையான வெல் லாம் மெ-யாகவும் பொ-த்தன்மையான வெல்லாம் பொ-யாகவும் விளங்கி விட்டன.

கொடிஞாழன் மாணிபூதனார்

50. அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்

திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறனெறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற் கேளா தெனவெல்லாங் கேட்டு.

-

(பொ-ரை.) பகைவென்ற பாண்டிய! திருவள்ளுவர் வாயினின்று, இதற்கு முன் கேட்டிராதவை யெல்லாம் கேட்டு நாற்பொருளின் இயல்பையும் நன்றா அறிந்தேம்.

கவுணியனார்

51. சிந்தைக் கினிய செவிக்கினிய வா-க்கினிய வந்த விருவினைக்கு மாமருந்து – முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய வின்குறள்வெண் பா.