பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

திருக்குறள்

தமிழ் மரபுரை






கூறப்பட்டிருப் பதே இதற்குப் போதிய சான்றாம். ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னும், ஆரி யம் என்னும் பேரே உலகில் தோன்றுமுன்னும், தமிழகத்தை மூவேந்தரும் கணிப்பில்காலம் ஆண்டுவந்தனரென்பதும், அவருள் முன்னோன் பாண்டி யன் என்பதும் வெள்ளிடைமலையாம். ஆகவே, அரசியல் நூலான பொருள் நூல் குமரிநாட்டுப் பாண்டியரிடையே முதன்முதல் தோன்றினதாகும். அதனால் தமிழரிடத்தினின்றே சுக்கிரர் என்னும் ஆரிய அமைச்சர்

பொருணூலைக் கற்றிருத்தல் வேண்டும். வேண்டும். அவர் நூலின் வழிநூலாகவே பாருகற்பத்தியமும் அவ் விரண்டின் சார்பு நூலாகவே கௌடிலீயமும் தோன்றியிருத்தல் வேண்டும்.

12. திருக்குறளின் தன்னேரின்மை

எல்லா நாட்டார்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றவாறு, இல்லற வாழ்க்கை யும் செங்கோலாட்சியும் எடுத்துக் கூறுவது திருக்குறள் ஒன்றே. நால்வேத மும் பாரதமும் மனுதரும சாத்திரமும் திருக்குறட்கு ஒப்பாகுமென்று திரு வள்ளுவ மாலைச் செ-யுள்கள் கூறுவது அவற்றைப் பாடியவரின் அறியாமை, அடிமைத்தனம், ஒப்புநோக்குத் திறமின்மை ஆகியவற்றையே ஒருங்கே காட்டும்.

இனி, இக்காலத்தும் ஆரியருந் தமிழருமான பலர் பகவற்கீதையைத் திருக்குறட்கு ஒப்பாகக் கூறத் துணிகின்றனர். கண்ணபிரான் அருச்சுனனுக்கு அறிவுறுத்தியதெல்லாம், போர்க்களத்திற் பொருமறவன் பகைப்படையிலுள்ள உறவினரை நோக்காது ஊக்கமாகப் பொருது தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டுமென்பதே. இதைப் பிற்காலத்து ஆரிய இனவெறிய னொருவன் பெரிதும் பயன்படுத்திக்கொண்டு, பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என்னும் நால்வரணத்தையும் இறைவனே படைத்தா னென்னும் நச்சுக் கருத்தை, அதிற் சூழ்ச்சியாகப் புகுத்தியிருக்கின்றான்.

நால்வரணம் இறைவன் படைப்பன்மைக்குச் சான்றுகள்

1. முதற்கால அநாகரிக மாந்தர் வகுப்பு வேறுபாடின்றியே யிருந்தமை.

2. இயற்கையான வகுப்புவேறுபாடு நிறத்தாலன்றித் தொழிலாலேயே ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ளமை.

3. தொழிலுக்குப் பிறப்பொடு தொடர்பின்மை.

4. தொழில் விருப்பப்படியும் திறமைப்படியும் மாற்றக்கூடியதா யிருத்தல்.

5. கல்வி ஒரே குலத்திற்குச் சிறப்புரிமையாகாது எல்லா வகுப்பார்க்கும் பொதுவாயிருத்தல்.