பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




-

இன்பத்துப்பால் - களவியல் - குறிப்பநிதல்

1096. உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ லொல்லை யுணரப் படும்.

(தோழி சேட்படுத்தியவழி அவள் குறிப்பறிந்த தலைவன் தன்னுள்ளே சொல்லியது.)

13

(இ-ரை.) உறாதவர் போல் சொலினும் - புறத்தில் அயலார்போல் அன் பில்லாத சொற்களைச் சொன்னாராயினும்; செறார் சொல் ஒல்லை உணரப் படும் - அகத்திற் பகையில்லாதவர் சொல் பின் பயன்படுதல் குறை வேண்டிய வரால் விரைந்தறியப்படும்.

சேட்படுத்தலாவது, தலைமகன் தலைமகள் ஆகிய இருவரின் காதல் நிலைமைகளையும் முற்றுந் தெளிவாக அறிதற்பொருட்டும், தலைமகளை அருமைப்படுத்தற் பொருட்டும், தோழி தலைமகனை நெருங்கவொட்டாது சில நாள் நீக்கி வைத்தல். அங்ஙனம் சேட்படுக்கும் போது, எம் உறவினர் கடுங்கண் மறவர் என்றும், இவ்விடம் காவன் மிகுதி யுடைமையால் நீர் வரத் தகாது என்றும், அன்பிலாதவள் போலக் கடுஞ்சொற்களைச் சொல்லுதல் மரபு. ஆயினும், தலைமகன் அறிவுடையனாதலின், அத்தகைய சொற்களால் தள ராது, தன் குறை முடிக்கக் கருதியே சேட்படுக்கின்றமை குறிப்பாலறிந்து, உல கியல்மேல் வைத்துக் கூறியதாகும் இக் குறட் கூற்று. இது வருகின்ற குறட்கும் ஒக்கும். 'செறார்' எனவே அன்புடைமை பெறப்படும். 'உறாஅ(தவர்)’, ‘செறா அர்' என்பன இசைநிறை யளபெடைகள். 'போல்' என்பது உண்மையில் உறாதவ ரன்மையைக் காட்டும். உம்மை எதிர்மறை.

1097. செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு

முறாஅர்போன் றுற்றார் குறிப்பு.

(இதுவுமது.)

(இ-ரை.) செறாச் சிறுசொல்லும் உண்மையாக வெறுப்புக் கொள்ளாத போலிக் கடுஞ்சொல்லும்; செற்றார்போல் நோக்கும் – அகத்திற் பகையாதிருந்தே புறத்திற் பகைத்தார்போற் பார்க்குஞ் சினப்பார்வையும்; உறார் போன்று உற்றார் குறிப்பு அயலார்போல் நடித்து அன்பராயிருப்பவரிடம் ஒரு கருத்துப்பற்றி நிகழ்வனவாம்.

இவை இயல்பல்லாது உள்ளத்துட் குறித்த ஒரு பயன்நோக்கிச் செ கின்றன வாதலின், இவற்றாற் கலங்க வேண்டுவதின்று என்பதாம். 'குறிப்பு' குபெயர். 'செறாஅ'. 'உறாஅர்' இசைநிறை யளபெடைகள்.