பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

திருக்குறள்

தமிழ் மரபுரை






தொடர்புகளாவன: தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், பிரிந்து கூடல், இன்பதுன்பங்கள் ஒக்க நுகர்தல், ஒன்றை (ஒருவரை) விட்டு ஒன்று (ஒருவர்) இன்றியமையாமை என்பன. தெ-வப் புணர்ச்சியால் மயங்கியிருந்த தலைமகள் பின்பு தெளிவுபெற்று இவன் யாவனோவெனவும், இன்று பிரிகின்றவன் மீண்டும் வருவனோவெனவும், இன்னும் இவனொடு கூடுதல் வா-க்குமோவெனவும் பலவாறெண்ணிக் கவல்வாள். அதைக் குறிப்பா லறிந்த தலைமகன், உன்னிற் பிரியேன்; பிரியின் உயிர் தாங்கேன் என்னுங் கருத்துப்படக் கூறித் தேற்றியவாறு. 'உடம்பு', 'நட்பு' என்பன வகுப்பொருமை. பல பிறவிகளில் தொடர்ந்து வந்த உழுவலன்பால் ஏற்பட்ட தொடர்பாதலின். வாழ்நாள் முழுதுந் தொடரும் என்பதாம். 'என்னை' யென்பது காலிங்கர் பாடம்.

1123.

கருமணியிற் பாவா-நீ போதாயாம் வீழுந் திருநுதற் கில்லை யிடம்.

(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.)

(இ-ரை.) கருமணியில் பாவா-

என் கண்ணின் கருமணியின்கண்

தங்கும் பாவையே; நீ போதா- - நீ அவ்விடத்தை விட்டுப் போவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை ஏனெனின், எம்மால் விரும்பப்படும்

அழகிய நெற்றியை யுடையாட்கு இருக்க வேறிடமில்லை.

யான் இவளைக் காணாதிருத்தல் கூடாமையின், என்றும் என் கண்ணிற் குள்ளேயே இருக்கத்தக்காள். அதற்குள் இருவர் இருக்க இடமின்மையின், உன்னினுஞ் சிறந்த இவட்கு அவ் விடத்தைக் கொடுத்துவிட்டு நீ வெளியேறி விடுவாயாக என்று, தன் மறவாக் காதலைத் தெரிவித்தவாறாம். 'யாம்' பெருமிதப் பன்மை அல்லது அரசப்பன்மை. 'திருநுதல்’ அன்மொழித் தொகை.

1124. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத லதற்கன்ன ணீங்கு மிடத்து.

(பகற்குறிக்கட் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.)

(இ-ரை.) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் ஆ-ந்தெடுத்த அணிகலன்களை யுடையாள் என்னோடு கூடுமிடத்து எனக்கு உயிருக்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும்; நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் என்னை விட்டுப் பிரியுமிடத்து அதற்கு அதினின்று நீங்கிச் சாதல் போலும்.