பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

திருக்குறள்

தமிழ் மரபுரை






(இ-ரை.) மாலை உழக்கும் துயர் மடலொடு - நான் மாலை வேளையிற் படுங் காமத்துயரினையும் அதற்கு மருந்தாகிய மடலேற்றம்பற்றிய எண்ணத்தை யும்; தொடலைக் குறுந்தொடி தந்தாள் கையை வளைந்த சிறு வளையல்களையுடைய உன் தலைவி தந்தாள்.

மாலைபோல்

காமநோ- ஏனை வேளைகளிலு முளதேனும் மாலைக் காலத்தி லேயே மிகுதியாகத் தாக்குவதால், 'மாலை யுழக்குந் துயர்' என்றும், அந் நோயின் முதிர்ச்சிபற்றியே மடலேற்றத் துணிவும் வந்ததனால் ‘மடலொடு' என்றும் நோயைத் தணிக்கும் ஆற்றலுள்ளவளாயிருந்தும் அதைத் தானாகச் செ-யத் தக்க பருவமும் உரிமையும் இல்லாத இளமையள் என்பது தோன்ற 'தொட லைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அவள் நின் பொறுப்பிலும் ஆட்சியிலும் உள்ளமையால், நீயே என் துயரை நீக்க வேண்டுமென்பது கருத்து. 'குறுந் தொடி' அன்மொழித் தொகை.

1136. மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற

படலொல்லா பேதைக்கென் கண்.

(மடலூரும் நேரம் இன்றைக்குக் கழிந்துவிட்டதென்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - பேதைத் தன்மையுள்ள உன் தலைவி கரணியமாக எனக்கு இராமுழுதுங் கண்ணடைப்பதே யில்லை; யாமத்தும் மடல் ஊர்தல் உள்ளுவேன் மன்ற - அதனால் எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் நான் மடலேறக் கருதுவது உறுதி.

இனி, நாளைக் குறைமுடிப்பேனென்று கடத்தி வைக்க வேண்டா வென்ப தாம். ‘பேதை' யென்பது இங்குப் பருவங்குறியாது இளமையும் மடமையுங் குறித்து நின்றது. 'மன்ற’ தேற்றப்பொரு ளிடைச்சொல்.

1137.

கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்.

(அறிவிலராய மகளிரினும் அதனையுடைய ஆடவரன்றோ காமநோயால் வருந்துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளற்பாலர் என்ற தோழிக்குச் சொல்லியது.)

-

(இ-ரை.) கடல் அன்ன காமம் உழந்தும் கடல் போலக் கரையற்ற காம நோயால் வருந்தியும்; மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் - அதை

"