பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




43

2

கற்பியல்

கற்பியலாவது, களவொழுக்கம் ஒழுகிய மெ-யுறு புணர்ச்சியரும் அஃதில்லா உள்ளப் புணர்ச்சியரும், வெளிப்படையாகக் கூடிவாழும் இல்லற வாழ்க்கையைப்பற்றிக் கூறும் பாற்பகுதி. கற்பாவது ஒருவரையுங் காதலி யாமையும் காதலிப்பின் எதிர்ப்பாலருள் ஒருவரையே காதலிப்பதும் ஆகும். அது கற்போல் திண்ணிய பண்பாதலின் கற்பெனப்பட்டது.

“கற்பென்னுந் – திண்மையுண் டாகப் பெறின்”

“கல்லொடு தொடர்ந்த நெஞ்சங்

கற்பின்மேற் கண்ட துண்டோ ா

“கற்பு றுத்திய கற்புடை யாடனை

(குறள். 54)

(கம்பரா. சுந்தர. நிந்தனை. 39)

(மேற்படி அயோத்தி. நகர்நீங்கு. 16)

என்று கம்பர் கூறுதல் காண்க. கற்பென்பது இருபாற்கும் பொதுவாதலாலும் மணஞ்செ-யு முன்பே அமைந்திருத்தலாலும் ‘கொண்டானிற் சிறந்த தெ-வம் இன்றெனவும் அவனை இன்னவாறே வழிபடுக'வெனவும் இருமுது குரவர் கற்பித்தலானும், அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும், “ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்" (தொல். பொருள். 146) ஒழுகும் ஒழுக்கந் தலைமகன் கற்பித்த லாலுங் கற்பாயிற்று. இனித் தலைவனுங் களவின்கண் ஓரையும் நாளுந் தீதென்றதனைத் துறந்தொழுகினாற்போல ஒழுகாது ஓத்தினுங் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக்கொண்டு துறவறத்திற் செல்லுந் துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று.” (தொல்.கற்பு. உரை) என்று நச்சினார்க்கினியர் கூறியிருப்பது ஆரியக் கருத்தேயன்றித் தமிழக் கருத்தன்று. மணமகளுக்குப் பணிவிடைபற்றிக் கற்பிப்பதெல்லாம் அறிவுரையேயன்றிக் கற்புரையன்று. இல்லறத்தாரெல்லாரும் இறுதியில் துறவறஞ் செல்லவேண்டு மென்பதும் தமிழர்க் குரியதன்று.