பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

திருக்குறள்

தமிழ் மரபுரை






கற்பொழுக்கம் என்னும் இல்லற வாழ்க்கை களவின்வழிப் பட்டதும் வழிப்படாததும் எனும் இருதிறத்தது. களவின்வழிப் பட்டதும், காதலியை வரைந்துகொண்டதும் உடன்கொண்டு உடன்கொண்டு சென்றதும் என இருவகைத்து. வரைந்துகொண்டதும், வெளிப்படுமுன் வரைந்ததும் வெளிப்படுமுன் வரைந்ததும் வெளிப்பட்டபின் வரைந்ததும் என இரு நிலைமைத்து. இனி, இல்லற வாழ்க்கையும், கரணம் என்னும் ஒப்பந்த அல்லது வாழ்த்துச் சடங்கொடு தொடங்குவதும் அஃதின்றித் தொடங்குவதும் என இரு மரபினதாம். கரணச் சடங்கு அவரவர் பொரு ளாட்சி நிலைமைக்கேற்ப விழாவொடு கூடியதும் கூடாததுமாக விருக்கும். இவற்றுள் முன்னது கொட்டுத் திருமணம் என்றும், பின்னது கட்டுத்தாலி யென்றும் சொல்லப்பெறும்.

"கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே”

(தொல். கற்பு. 1)

"கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே

புணர்ந்துடன் போகிய காலை யான.

(தொல். கற்பு. 2)

திருவள்ளுவர் சொற்களை மட்டுமன்றிப் பொருள்களையுஞ் சுருங்கச் சொல்கின்றாராதலின், பெற்றோர்க்குச் சிறிது காலம் பெருந்துயர் விளைக்கும் உடன்போக்கையும், இடைவகுப்பார்க்கும் எளியார்க்கும் கைக்கு மிஞ்சிய செலவையுங் கடனையும் நேர்விக்குங் கரணவிழாவையும், ஆங்காங்குக் குறிப்பாகவன்றி வெளிப்படையாகச் சொல்லியிலர்.

இனி, தமிழ்க் களவுமணம் ஆரியக் காந்தருவத்தை யொக்குமென்று தொல்காப்பியர் கூறியதைப் பற்றுக்கோடாகக் கொண்டு,

"முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே

பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே

(தொல். களவு. 14)

என்னுந் தொல்காப்பிய நூற்பாவிற் குறிக்கப்பட்டுள்ள 'முன்னைய மூன்றும்’ அசுரம் இராக்கதம் பைசாசம் என்றும், 'பின்னர் நான்கும்' பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெ-வம் என்றும், உரையாசிரியரெல்லாரும் மயங்கியுரைப்பா ராயினர். அசுரம் என்பது கைக்கிளையாகத் தொடங்கினும் இருதலைக் காம மாகவும், மாறலாமாதலானும், இராக்கதமும் பைசாசமும் பெருந்திணையாத லானும் பிரமம் முதலிய நான்கும் கைக்கிளையாகவோ இருதலைக் காம மாகவோ தானிருக்க