பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

திருக்குறள்

தமிழ் மரபுரை






1156.

பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர் நல்குவ ரென்னும் நசை.

(தலைமகன் பிரிவுணர்த்தியதைத் தெரிவித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.)

(இ-ரை.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் - என் காதற் பெருக் கையுங் கவவுக்கை யிறுக்கையும் கண்டறிந்த தலைவர் தாமே, நம் முன் நின்று தம் பிரிவையுணர்த்தும் வன்னெஞ்சராயின்; நல்குவர் என்னும் நசை அரிது அத் தன்மையர் பின்பு நம் ஆற்றாமையறிந்து வந்து பேரன்பு செ-வரென்னும் ஆசையை விட்டுவிட வேண்டியதுதான்.

இது தலைமகள் தன் இளமையினாலும் இல்லறத் தொடக்க நிலையி னாலும், பொருளின் இன்றியமையாமையையும் ஆடவர் கடமையையும் உணராது காதலொன்றையே கருதிக் கூறிய கூற்றாகும். அருமை பெரும் பாலும் நிறைவேறாமை. செலவழுங்குவித்தல் பயன்.

1157. துறைவன் றுறந்தமை தூற்றாகொன் முன்கை யிறையிறவா நின்ற வளை.

(இதுவுமது.)

(இ-ரை.) துறைவன் துறந்தமை தலைவன் என்னைவிட்டுப் பிரிந் தமையை; முன்கை இறை இறவா நின்ற வளை தூற்றாகொல் - அவனுணர்த் தாமல் தாமே யுணர்ந்து என் முன்கையின் வளைவினின்று கழன்று நின்ற வளையல்களே எனக்கு அறிவியாவோ? நீ அவன் வா-ச்சொல்லால் அறி விக்க அறிந்து வந்து எனக்கு அறிவிக்க வேண்டுமோ?

பிரிந்து செல்ல முன்னமே தீர்மானித்துவிட்டமையால் 'துறந்தமை' யென்றும், குறிப்பாலறிந்து வாடிய வாட்டத்தால் வளை கழன்றமையால் 'இறவா நின்ற வளை' யென்றும், பலரறிய வெளிப்படையா- நிகழ்ந்தமையால் 'தூற்றா கொல்’ என்றுங் கூறினாள். செலவழுங்குவித்து எனக்குத் துணையா யிராது, செலவு நிகழ்ந்ததைக் கூறித் துன்பஞ் செ-தா- என்று புலந்து கூறிய வாறு. 'வளை’ பால்பகா அஃறிணைப் பெயர்.

1158. இன்னா தினனில்லூர் வாழ்த லதனினு

மின்னா தினியார்ப் பிரிவு.