பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - கற்பியல் - கண்விதுப்பழிதல்

59

இங்ஙனம்

மீண்டும் பிரிதலஞ்சித் தூங்கா; ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன அவ்விரு நிலைமையிலும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தை யடை

கின்றன.

1180.

என் கண்கள் ஒருபோதும் தூங்கும் நிலைமையில்லை யென்பதாம்.

மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ லறைபறை கண்ணா ரகத்து.

(காதலரை இவ்வூர் இயற்பழியாவாறு அவர் குற்றத்தை

மறைக்க வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) எம் போல் அறை பறை கண்ணார் அகத்து மறை பெறல் எம்மைப் போலப் பறையறையுங் கண்ணையுடையார் தம் நெஞ்சிலடக்கிய மறைபொருளை யறிதல்; ஊரார்க்கு அரிது அன்று இவ் வூர் வாழ்நர்க்கு எளிதாகும்.

யான் மறைக்கவும் என் கண்கள் வெளிப்படுத்தலின் மறைத்துப் பய னில்லை யென்பதாம். மறைக்கப்படும் பொருள் மறை; ஆகுபெயர். பறை யறைந் தறிவித்தாற் போலப் பலர்க்குந் தெரிவித்தலின் 'அறைபறை கண்' என்றாள். "இங்ஙனஞ் செ-யுள் விகார மாக்காது, அறைபறை கண்ணாரென்று பாடமோதுவாரு முளர்" என்றார் பரிமேலழகர். இனி, 'எம்போற் பறையறை கண்ணார்' என்று பாடமோதின், எதுகை கெடாதும் இன்னோசை குன்றாதும் மரபு திரியாதும் இலக்கணம் வழாதும் இருத்தல் காண்க. மோனை கெடுமே யெனின், அதனா லிழுக்கில்லையென்றும், மோனையில்லா ஈற்றடியே திருக் குறளிற் பெருவழக்கென்றும், கூறிவிடுக்க. ‘ஆல்' அசைநிலை.

அதி. 119 - பசப்புறு பருவரல்

அதாவது, பிரிவாற்றாமையால் தலைமகளின் மேனியிற் பசலை யென் னும் நிறவேறுபாடு தோன்றற் கேதுவாகிய வருத்தம். இது தலைமகனை நீண்ட நாளாகக் காணப்பெறாவிடத்து நிகழ்வதாகலின், கண்விதுப் பழிதலின் பின் வைக்கப்பட்டது.

பசப்பு அல்லது பசலையென்பது பைம்பொன்னொத்த பசு மஞ்சள் நிறம் கொண்டது. அது சுணங்கு, தேமல் என்றும் பெயர் பெறும். மேனியழகி னாலும் தேமல் படர்வதுண்டு. அது அழகுதேமல் எனப்படும்.