பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




-

இன்பத்துப்பால் - கற்பியல் - பசப்புறு பருவரல்

63

தன்னையே கடிதல்பற்றிப் புலக்கின்றாளாதலின், 'என்பார்' என அயன்

மைப்படுத்திக் கூறினாள்.

1189. பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலைய ராவ ரெனின்.

(இதுவுமது.)

(இ-ரை) நயப்பித்தார் நல் நிலையர் ஆவர் எனின் - இப் பிரிவிற்கு யான் உடம்படும்வகை பசப்பியவர் இன்று உன் கருத்துப்படி குற்றமற்றவராயின்; என் மேனி பட்ட ஆங்கு பசக்க - என் மேனி இன்று பசந்தபடியே பசக்க.

இப் பிரிவின் கொடுமையை இதற்குமுன் பட்டறியாத என்னை இதற் குடன்படுத்திப் பிரிந்தவர், எவ்வகையிலுங் குற்றமற்றவரென்று நாட்டுவது தானே உன் விருப்பம்! அங்ஙனமாயின், என் மேனியையும் பசலையையுங் கவனிப்பானேன்? அவை எங்ஙன மிருந்தால்தானென்ன என்பதுபட நின்றமை யின் 'மன்' ஒழியிசைபற்றி வந்தது.

1190.

பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றா ரெனின்.

(தலைமகளை யாற்றுவித்தற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவிடத்து அவள் இயற்பட மொழிந்தது.)

(இ-ரை.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் பிரிவிற்கு உடம்படச் செ -த காதலர் இன்றுவந்து கூடாமையை நட்டோர் பழியாராயின்; பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே ட பசலையடைந்தாள் என்று வேற்றுமைப்

படச் சொல்லப் படாது, பசலையே யானாள் என்று ஒற்றுமைப்படச் சொல்லப் பெறுதலும் நல்லதேயாம்.

பசலையடைதல் மேனிமட்டும் பசப்புநிறம் பெறுதல். பசலையாதல் உடம்பு முழுவதும் பசப்பாக மாறுதல். நட்டோர் என்பது அவா-நிலையால் வந்தது; இகழ்ச்சிக் குறிப்பு. ஏகாரம் தேற்றம்.

அதி. 120 - தனிப்படர் மிகுதி

அதாவது, பிரிவின்கண் தனித்திருந்து நினைதல் மிகுதியைத் தலைமகள் தன்கண்ணதேயாகக் கூறுதல். தலைமகன் அறமும் பொருளும் நோக்கிப்