பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் கற்பியல் - தனிப்படர் மிகுதி

69

புணர்ந்தவிடத்தும் பிரிந்தவிடத்தும் ஒப்ப வினிதென்பான் ‘எனைத்து மினி'தென்றான், தான் ஆற்றிய வகை கூறியவாறு. ஏகாரம் தேற்றம். 'காண் முன்னிலை யசை.

1203. நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல் சினைப்பது போன்று கெடும்.

(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றி அடங்கிவிடுகின்றது; நினைப்பவர் போன்று நினை யார் கொல் - ஆதலால், காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாது விட்டுவிடுன்றார் போலும்!

வேற்றிடத்திலுள்ள அன்பு கெழுமிய உறவினரால் நினைக்கப்பட்ட வர்க்குத் தும்மலெழுமென்பது, பொதுவான உலகியற்கொள்கை. கணவன் மனைவியரினுஞ் சிறந்த வுறவின்மையால், வினைபற்றிப் பிரிந்து வேற்று நாடு சென்ற கணவன் தன் மனைவியை நினைப்பது இயல்பே. ஆயின், இடைவிடாது வினை கெடுமாதலின், வினை முடிந்த பின்னரே மனைவியை நினைத்து மீளுவதாகக் கூறுவது புலனெறி வழக்கம். அதற்கேற்ப, தலைமகள் தனக்குத் தும்மல் தோன்றி யடங்கியதினின்று, தலைமகன்மேற் கொண்ட வினை முடிவது போன்று தோன்றி முடியாமையை யுணர்ந்தாளாகக் கொள்ளப் பெறும். சினைத்தல் அரும்புதல். 'கொல்' ஐயம்.

1204.

யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ வுளரே யவர்.

(இதுவுமது.)

-

எம்முடைய உள்ளத்தில்

(இ-ரை.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே அவர் எப்போதும் இருக்கின்றாரே! அவர் நெஞ்சத்து யாமும் உளேங் கொல் - அதுபோல யாமும் அவர் உள்ளத்தில் இருக்கின்றேமோ; இல்லேமோ? தெரிய வில்லையே!

யாம் அவர் உள்ளத்திலிருந்தும் வினை முடியாமையால் வரவில் லையோ. அது முடிந்தும் யாம் அவர் உள்ளத்தில் இல்லாமையால் வரவில்லையோ, என்பது கருத்து. ஓகாரம் ஈண்டுச் சிறப்புப்பற்றி இடை