பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் - கற்பியல் - கனவுநிலையுரைத்தல்

(இ-ரை.) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

73

யான் வருந்துத லறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதைக் கொண்டுவந்து காட்டிய கனவிற்கு; விருந்து யாது செ-வேன் - விருந்தாக நான் எதனைச் செ-வேன்?

விருந்து என்னுஞ் சொல் விருந்தாளையும் விருந்துணவையுங் குறிக்கும். இங்கு விருந்தென்றது விருந்திற்குப் படைக்குஞ் சிறப்புணவை. கனவிற்குப் படைப்பதொன் றின்மையின் 'யாது செ-வேன்' என்றாள். 'கொல்' அசைநிலை.

1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன்.

(தூதுவிடக் கருதியாள் சொல்லியது.)

(இ-ரை.) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் தூக்கம் பெறாது வருந்துகின்ற என் கயல்மீன்போலும் மையுண்ட கண்கள் யான் வேண்டிக் கொண்டால் தூங்குமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - காத லரைக் கனவிற் கண்டு நான் பிரிவாற்றக் கூடிய தன்மையைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துச் சொல்வேன்.

தூதரிடம் சொல்லக் கூடாத மருமச் செ-திகள் உட்பட, எல்லாவற்றை யும் பறைசாற்றினாற்போலத் தெளியச் சொல்வேன் என்னும் என்னும் கருத்தினாற் 'சாற்றுவேன்' என்றாள். என் கண்களுந் தூங்கா சாற்றலுங் கூடாது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசை. முன்னுங் கண்ட பட்டறிவால் சொன்னமையின், கனவுநிலை யுரைத்ததாயிற்று. 'கயலுண்கண்' என்றாள் தன் கணவனொடு கூடியிருந்த காலத்து நலம் அழிந்தமைக் கிரங்கி. கயல் என்பது சேல்கெண்டை. 'உயல்' இறந்துபடாமை.

1213.

நனவினா னல்கா தவரைக் கனவினாற் காண்டலி னுண்டென் னுயிர்.

(ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவேன் என்பதுபடச் சொல்லியது.)

(இ-ரை.) நனவினான் நல்காதவரை - நன்வின்கண் வந்து கூடியின்பந் தராதவரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கட் கண்ட காட்சியால் என் உயிர் தழைக்கின்றது.