பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

திருக்குறள்

தமிழ் மரபுரை






அக் காட்சியால் யான் ஆற்றியுள்ளேன். நீ கவல வேண்டுவதில்லை என்பதாம். மூன்றாம் வேற்றுமை ஆனுருபுகள் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்து மயங்கின.

1214.

கனவினா னுண்டாகுங் காம நனவினா

னல்காரை நாடித் தரற்கு.

(இதுவுமது.)

இ-ரை.) நனவினான் நல்காரை நாடித் தரற்கு - நனவின்கண் வந்து கூடி யின்பந்தராதவரை இருக்குமிடந் தேடிச்சென்று தூதர் அழைத்து வரற்கு; காமம் கனவினான் உண்டாகும் ஏதுவான இன்ப நிகழ்ச்சிகள் கனவின்கண்

நிகழ்கின்றன.

'காமம்' ஆகுபெயர்.

1215. நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே யினிது.

(இதுவுமது.)

(இ-ரை.) நனவினாற் கண்டதும் ஆங்கே (இனிது) முன்பு நனவின் கண் காதலரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதே இனிதாயிருந் தது; கனவும் தான் கண்டபொழுதே இனிது இன்று கனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதா யிருந்தது. ஆதலால் இரண்டும் எனக்கு ஒத்தனவே.

முன்னும் யான் பெற்ற இன்பம் இவ்வளவே. அதை இன்னும் இங் ஙனமே பெற்று ஆற்றுவேன் என்பதாம். 'கண்டதூஉம்' இன்னிசை யளபெடை. ஏகாரங்கள் பிரிநிலை. 'கனவு' ஆகுபொருளி. 'இனிது' முன்னுங் கூட்டப்பட்டது. மூன்றாம் வேற்றுமை ஆனுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் மயங்கிற்று. 1216. நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற்

காதலர் நீங்கலர் மன்.

(இதுவுமது.)

(இ-ரை.) நனவு என ஒன்று இல்லையாயின் நனவென்று சொல்லப் படுகின்ற ஒரு காலவேறுபாடு இல்லையாயின்; கனவினாற் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடுங் காதலர் என்னைவிட்டு ஒருபோதும் பிரியார்.