பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 4.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துப்பால் கற்பியல் - நிறையழிதல்

89

இடப்பொருட்சொல் 'அம்' என்னும் முதனிலைப் பொருளீறு பெற்ற தென்று அவர் கொண்டது சரியே.

1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா

வின்னு மிழத்துங் கவின்.

(அவரை மறந்தாற்றல் வேண்டுமென்பது படச் சொல்லியது.)

(இ-ரை.) துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - எம்மைக் கூடா வண்ணம் பிரிந்து போனவரை எம் உள்ளத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன்னிழந்த புறவழகேயன்றி எஞ்சி நின்ற அகவழகும் இழப்பேம்.

அவர் நம்மைக் கூடாவாறு பிரிந்து போனமையாலும், நாம் அவரை மறக்க முடியாமையாலும், போன மேனியழகேயன்றி நின்ற நிறையும் இழப் பேம். ஆதலால், அவரை மறந்தாற்றுதலே நன்றென்பதாம்.

அதி. 126 - நிறையழிதல்

அதாவது, தலைமகள்

பல

தன் ப மனத்து அடக்கவேண்டிய செ-திகளைத் தன் வேட்கை மிகுதியால் வெளிவிட்டுச் சொல்லுதல். "நிறை யெனப்படுவது மறைபிற ரறியாமை" என்றார் நல்லந்துவனார் (கலித். 123): நிறையழிதற்குக் கரணியம் மேலதிகார ஈற்றுக் குறளிற் கூறப்பட்டதனால், இது நெஞ்சொடு கிளத்தலின் பின் வைக்கப்பட்டது.

1251.

காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னு நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

(நாணு நிறையு மழியாமை நீ யாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

(இ-ரை.) நாணுத் தாழ் வீழ்த்த நிறையென்னுங் கதவு நாணாகிய தாழிட்டுப் பூட்டிய நிறையென்னுங் கதவை; காமக் கணிச்சி உடைக்கும் காமவேட்கையாகிய கோடரி வெட்டிப் பிளக்கும்.

நாணுள்ள வரையும் நிறை அழியாதாகலின் அதைத் தாழாக்கியும், அகத்துள்ளவற்றைப் பிறர் கவராமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலிமையுள்ள இவ் விரு பண்புகளையும் ஒருங்கே நீக்கலின் காமவேட்கை யைக் கோடரியாக்கியும் கூறினாள். இஃது உருவக அணி.