தெளிதேனும் களி மதுவும்
கள் = தேன், மது = தேன். தேன்
=
கள். தேறல் = கள்.
99
இங்ஙனம் உணர்த்தினும் இச் சொற்கள் தம் வேர்ப்பொருள் மாறா. கள், மது என்னும் சொற்களின் வேர்ப்பொருள் மேற்காட்டப்பட்டது. இனி, தேன், தெளிவு. தேறல் என்னும் சொற்களின் சொல்லியல் வரலாறு வருமாறு: தெல் - தென் - இனிமை.
ஒ.நோ: வெல் - வென் - வெற்றி.
"தென்னிசை பாடும் பாணன்”(திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம். 56 :. 7) தென் என்னும் சொல் முதலாவது தெளிவு என்று பொருள்பட்டு, பின்பு தெளிவான தேனையும், தேனின் சுவையான இனிமையையும் உணர்த்திற்று.
தென்
—
=
தெளிவு. தெளிவு மனத்தெளிவு ஆகிய என்பது உலகவழக்கில்
தென்பு தெம்பு தெளிவு. தென்பு என்பது முற்கூறியவாறு பொருட்டெளிவு, இரண்டிற்கும் பொதுவாதலால், தெம்பு மனத்தெளிவை உணர்த்திற்று.
ஒ.நோ: நல் + பு = நன்பு (நன்மை)
―
―
தெல் -தெள் தெளி தெளிவு.
தெல் – (தெர்) – தெரி. தெரிதல் = தெளிவாய்த் தோன்றுதல், புலனாதல். (தெர்) - தெருள். தெருள்தல் = தெளிதல்.
சொல்லாக்கத்தில், லகர ளகர மெய்கள் ரகர மெய்யாகத் திரிவது
பெரும்பான்மை.
எ-கா: சாம்பல்
—
சாம்பர், கள் - (கர்)
―
―
கரு கருப்பு.
தெள் - தெறு – தெற்று.
ஒ.நோ: வெள் - வெறு - வெற்று, வெள்ளிலை - வெற்றிலை
தெற்று = தெளிவு, தேற்றம்.
தெற்றென = தெளிவாக
"யானுந் தெற்றென வுணரேன்” (அகம். 48).
தெற்றெனவு = தெளிவு.
"தெற்றென வில்லார் தொழில்” (திரிகடு. 54).
தெற்றென்னுதல் = தெளிதல்.
"தெற்றென்க மன்னவன் கண்” (குறள் 581). தெற்றல் = அறிவில் தெள்ளியவன். 'இனையரு திற்றுவீழ நடைகற்ற தெற்றல்”
(திவ். பெரிய திருமொழி 11 : 4 : 9)
தெறு - தேறு, தேறுதல் = தெளிதல் தேறு = தெளிவு, தேற்றம், தேற்றாங்கொட்டை.