பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(16

பண்டைத் தமிழர் காலக்கணக்கு முறை

ஆதியில் ஒவ்வொரு நாட்டிலும், மக்கள் காலத்தைக் கணக்கிடு வதற்குச் சூரியனையே அடிப்படைக் கருவியாகக் கொண்டிருந்திருக் கின்றனர் என்பது எவர்க்குஞ் சொல்லாமலே விளங்கும்.

"தோற்றஞ்சான் ஞாயிறு நாழியா வைகலுங்

கூற்று மளந்துநுந் நாளுண்ணும்’

என நாலடியாருங் கூறுகின்றது.

""

(நாலடி. 7)

சூரியனின் தோற்ற மறைவுகளினால் முறையே பகலும் இரவும் நிகழ்கின்றன. ஒரு பகலும் ஓர் இரவுஞ் சேர்ந்து ஒரு நாள் என்னும் அளவா யிற்று.

மக்கள் நாகரிகமடைந்து, நுட்பமாய்க் காலத்தைக் கணக்கிட நேர்ந்த போது, ஒரு நாளுக்குள், நாழிகை(24 நிமிடம்) மணி, நிமிடம், நொடி(விநாடி) முதலிய நுண்கால அளவுகளும் சூரியனின் எழுச்சி வீழ்ச்சிகளால் காலை மாலை என்னும் வேளைகளும், இராப்பகல்களின் தோற்ற நடுவிறுதிகளால் 4 மணி நேரங்கொண்ட சிறுபொழுது என்னும் அளவும் எழுந்தன. ஒருநாளுக்குமேல், எழுகோள் (கிரகம்)களின் பெயரால் வாரம் என்னும் அளவும், மதியின் வளர்வு தேய்வுகளால் பக்கம் (Fortnight) என்னும் அளவும், ஒரு வளர்பிறையும் ஒரு தேய்பிறையுஞ் சேர்ந்து மாதம் என்னும் அளவும், மருத்துவ முறையால் மண்டலம்(40 அல்லது 48 நாள்) என்னும் அளவும், தட்பவெப்பநிலை (சீதோஷ்ணஸ்திதி) மாறுபாட்டால் பெரும் பொழுது (பருவம் = 2 மாதம்) என்னும் அளவும், சூரியனின் வட தென் வழிகளால் அயனம் (6 மாதம்) என்னும் அளவும், ஒரு வட வழியும் ஒரு தென்வழியுஞ் சேர்ந்து ஆண்டு என்னும் அளவும், சில பஞ்சங்களி னால் அறுபதாண்டு கொண்ட ஓர் அளவும், எரிமலையாலும் கடல் கோளாலும் நிகழ்ந்த சில பெருநிலத்தழிவுகளால் ஊழி(யுகம்) என்னும் அளவும், நாலூழி கூட்டிச் சதுரூழி என்னும் அளவும் ஏற்பட்டன. இவற்றுள் ஊழியும் சதுரூழியும் புராணமுறை பற்றியனவேயன்றி, உண்மையான சரித்திரமுறை பற்றியனவல்ல.

2

மேற்கூறிய சிற்றளவுகட்கும் பேரளவுகட்கும் ஆதாரமாயிருப்பது நாள் என்னும் அளவேயாகும்.