பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கற்புடை மனைவியின் கண்ணியம்

91

காதலில் கற்புண்டு; கற்பில் காதலிருப்பது யாப்புறவின்று. வாழ்நாள் முழுதும் மணம் விரும்பாதவளுக்கும் துறவியா யிருப்பவளுக்கும் கற்பிருக்கலாம்; ஆனால் காதலிராது. அச்ச முதலிய நாற்குணங்களுள், நாணம் பயிர்ப்பு என்னும் இரண்டும் கற்பா யமையும்; ஆனால் காதலா யமைவது ஒன்றுமில்லை. ஆகவே, அச்ச முதலிய நான்கும் (ஒழுக்கமுள்ள) பெண்பாற் பொதுக்குணமும், காதலொன்றும் (அன்புள்ள) மனைவியின் சிறப்புக் குணமுமாகும்.

கணவன் மனைவியாகிய இருவர்க்கும் காதல் ஒருபடித்தாய் இன்றியமையாதது. அது இல்லற வாழ்க்கைக்குரிய நற்குணங்க ளெல்லாந் திரண்டு முழுநிறைவானது. அது இரு கைகோளுக்கும் பொது. சிலர்க்குக் களவிலேயே தொடங்கலாம்; சிலர்க்குக் கற்பில்மட்டும் தொடங்கலாம். கற்பெல்லாம் காதலற்றதென்று கொள்வது தவறு. களவில் வெளிப்பட வாய்ப்பில்லாத காதல், கற்பில்தான் வெளிப்படும். அத்தகைக் காதல், கரணமும் வாயிலும் பெற்றதேனும், காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது போன்றதே. களவிலும் சூளுறவாகிய கரணமும், பாங்கனும் பாங்கியுமாகிய வாயில்களுமுண்டே! களவிற்கு அல்லது காதலுக்கு மெய்யுறு புணர்ச்சி இன்றியமையாது வேண்டுவதின்று; உள்ளப் புணர்ச்சியே போதும்.

ce

உள்ளப் புணர்ச்சியு மெய்யுறு புணர்ச்சியுங் கள்ளப் புணர்ச்சியும் காதலர்க் குரிய,”

(நம்பியகப்பொருள், 34)

உள்ளப் புணர்ச்சியையும் மெய்யுறுபுணர்ச்சியோ டொப்பக் கொண்டமையானேயே, திலகவதியார் போன்ற பண்டைக் கற்புடை மாதர், மணப்பேச்சு நிகழ்ந்து மணம் நிகழாதவழியும் கணவனிறந்தவிடத்து உயிர்நீக்கவும் கைம்மை நோற்கவும் தலைப்பட்டனர். உயர்ந்தோர் உள்ளப் புணர்ச்சியாலும் இன்பம் நுகர்வர்; தாழ்ந்தோரே மெய்யுறு புணர்ச்சியினாய இன்பமே வேண்டுபவர்.

இனி மணமக்கள் இருவரும் மணப்பேச்சிற்கு முன் ஒருவரை யொருவர் ஒருவகையாலும் அறியாதவரா யிருப்பினும், மணப்பேச்சுவழி அறிந்தவரேயாவர். அவரிடைக் காதல் தோன்றுமாயின் இரும்பைக் காந்தமிழுப்பது போலும், கட்டையில் தீப்பற்றுவதுபோலும் ஒருவர் மனத்தை ஒருவர் மனம் இழுத்துப் பற்றிக்கொள்ளும். வேட்டஞ்சென்ற தலைமகனும் புனங்காத்த தலைமகளும் காட்டில் ஒருவரை யொருவர் கண்டது போன்றே. மணப்பேச்சிற் குரிய மணமக்களும் வீட்டில் ஒருவரை யொருவர் காண்கின்றனர்; கண்ணாற் காணும் வாய்ப்பின்றேல் கருத்தா லேனுங் காண்கின்றனர். காதலுக்குக் காணுவதுங் கண்ணுவதும் ஒன்றே. உள்ளத்தால் மட்டும் கலக்கும் நட்பிற்கே புணர்ச்சியும் பழகுதலும் வேண்டாது உணர்ச்சியே போதுமெனின், உள்ளத்தாலும் உடலாலும்