பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அசுரர் யார்?

99

(காசியப முனிவர்) தந்தையென்றும் புராணங் கூறுகிறது. தென்பெருங் கடலில் முழுகிப்போன ஒரு தீவையாண்ட சூரபதுமன் அசுரனாகவே

சொல்லப்படுகின்றான்.

இங்ஙனம் தமிழகமெங்கும் தொன்முதுகாலத்திலிருந்த அரசரை யெல்லாம் அசுரரும், அரக்கருமாகக் கூறுவதே அயிர்ப்பிற்கு (Suspicion) இடனாகின்றது. இனி செங்குட்டுவனிலும், பன்மடங்கு திறமையாக ஆண்ட சேர வேந்தனாகிய மாவலி என்னும் பச்சைத் தமிழனையும் அவன்மகன் வாணனையும், அசுரராகப் புராணாங் கூறுவது. எனைமுது பண்டைத் தென்னாட்டரசரும், தமிழரே என்றும் வாணன் என்னும் பெயரைப் பாணன் என்றும் திருத்தினர் பின்னோர்.

மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளையின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார்.

நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்து தன் அடியிற் படியை அடக்கிய வந்தாள்

நீரிற் பெய்த மூரிவார்சிலை

மாவலி மருமான் சீர்கெழு திருமகள்

சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவி யொடு

இந்திர திருவன் சென்றினி தேறலும்

மணிமேகலை (19.51 – 116)

இப்பகுதியில் மாவலிக்கு “மூரி வார்சிலை” என்னும் அடை கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. சேரனுக்குச் சிறப்பாக உரியசின்னம் வில். மூரிவார்சிலை - வலிமையுள்ள நீண்ட வில் "மூரிவெஞ்சிலை” என்றார் கம்பரும் (கம்பராகும் - 26).

-

மாவலியின் மகன் வாணன் அவன்வழியினர் தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோவலூரைச் சூழ்ந்த மகதையென்னும் நடுநாட்டை 14ஆம் நூற்றாண்டு வரை வானகோவரையர் என்னும் பட்டப் பெயருடன், பெரும்பாலும் சேர வேந்தர்க்கடங்கிய சிற்றரசராயும், படைத் தலைவராயு மிருந்து ஆண்டு வந்ததாகச் தெரிகின்றது.

வாண கோவரையிரைப் பற்றி வி.நா. இராமச்சந்திர தீட்சிதர் கூறுவது:- மகாபலியின் வமிசவத்தர்களாக வழங்கப்பட்ட இவர்கள், சங்ககால முதலே பலம் பெற்ற சிற்றரசராயிருந்தவர்கள். அக்காலத்தில் சோணாடாண்ட கிள்ளிவளவனது பட்டத்துத் தேவி சீர்த்தி என்பவளை மாவலி மருமான் சீர்கெழுத் திருமகள்' என்று மணிமேகலை கூறுதலுங் காண்க. பிற்காலத்தில் இன்னோர் நடுநாடான மகதை மண்டலத்தின் தலைவர்களை ஆறகழூர் அல்லது ஆறை என்ற நகரிலிருந்து ஆட்சி செய்து, சோழ ஏகாதி பத்தியத்தின் பெருமையைத் தாங்கி வந்தார்கள். நம் சோழனது ஆட்சிக்