பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

தமிழியற் கட்டுரைகள்

"சேனை தழையாக்கி செங்குருதிச் நீர்தேக்கி ஆனை மிதித்த அடிச்சேற்றில் மானபவன் மாவேந்தர் வேந்தன் பறித்து நட்டான் ஓகம்பன்

மூவேந்தர் தங்கள்முடி”

இங்ஙனம் மாவலி மரபு வாண கோவரையர் வரை தொடர்ந்து வந்த தூய தமிழ்க் குடியாயிருக்க அவனையும் அவன் மகனையும் அசுரன் எனக்கூறுவது எவ்வாறு பொருந்தும்?

இனி அசரர் தமிழர் அல்லது திராவிடர் என்பதற்கு வேறுமொரு சான்றுண்டு. வடநூல்கள் கூறும் எண்வகை மணங்கள் ஒன்றான ஆசுரம், மறச் செயல் புரிந்த மகட் கோடலாம். ஆசுரமாவது! கொல்லேறு கேபிடல், திரிபின்றி செய்தல், வில்லேற்றுதல், முதலியன செய்து கோடல் என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள் சூ. 92 வரை) பண்டை தமிழகத்து முல்லை நிலத்தில் ஒரு பெண் பிறந்த போதே ஒருசேய் கன்னிற்கு அவள் பெயர் குறித்து அதை கொல்லேருக வளர்ப்பதும், அவள் பூப்படைந்த பின் அக்கொல்லேற்றை அடக்குபவனுக்கே அவனைக் கொடுப்பது வழக்கம். "கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்

புல்லாளே ஆயமகள்." (கலித்தொகை)

கன்றுகாலி வளர்த்து நெய்பால் விற்கும் இளம் செய்தி இத்தாயின் போரையே தொழிலாகக் கொண்ட பாலை மறவரும் மூவேந்தரும் எத்துணைத் தறுகணாளருடம் துணி செயலாளருமா யிருந்திருப்பார். இதனாலேயே செயற்கருஞ் செயலை அசுரநிருத்தியம் என்றும், அறுவை மருத்துவத்தை (Surgery) அசுரவைத்தியம் என்றும் வடநூல் கூறும்.

ce

ஆரார் தலைவளம்கார் ஆரார்தார் கையெடார். ஆரள் தாஞ் சித்திரத்தில் ஆறாதார் சீராருடம் தென்புலியூர் மேவும் சிவனருள் சேர் அம்பட்டத் தம்பிபுகான் வாசலிலேதான்"

என்னும் கம்பர் பாடல், பண்டைத்தமிழ் அறுவை மருத்துவத்திற்குச் சான்று பகரும்.

பண்டைக் காலத்தில் மாபேருடல் வலிமையுள்ள மல்லரையும், மறவரையும், உறுவலி மதவலி மாவலி என்றழைப்பது வழக்கம். மாவலிமை யுடைமையாலேயே மாவலி அப்பெயர் பெற்றான். மூவுலகையும் அடக்கியாண்ட மாவலி என்று அவனை இகழ்வோரும் புகழ்வர். வரையாது வந்தீயும் வள்ளன்மையும் வருவதற் கஞ்சா வாய்மையும் முறைசெய்து காப்பாற்றும் இறைமையும் மாவலியின் அருடம் பண்புகள்.

ஆரியத்திற்கு மறிக யிருந்ததினாலோ சிவநெறிக் கடும் பற்றினாலோ சூழ்ச்சியாக மாவலி மாய்க்கப்பட்டான். அதன் முடிவு அவன் மறைந்தது