பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

முருகுமுதன்மை

முருகு முதன்மை யென்பது முருகனின் முதன்மை என்று பொருள் படுவது. முதன்மை என்னுஞ்சொல் முன்மை, தலைமையென இருபொருள் தரும்.

1. முருகு என்னுஞ்சொல் வரலாறு:-

=

உல்-முல்-முன்-முனி - (கன்று), யானைக்கன்று.

"முனியுடைக் கவளம் போல” (நற். 360). முன் - L. min =Small, minimus

Smallest

இவ்விலத்தீன் சொன்களினின்று, mini (e.g. minibus, minicale), mini- ature, minify, minim, minimal, minimalize, minimus, minor, minute

முதலிய ஆங்கிலச் சொற்கள் பிறக்கும்.

முல்-முள்-முளை = 1. தோன்றுவது, தோன்றியது. 2. இளமை, 'முளையமை திங்கள் (கம்பரா. கும்பக.16) 3. மரக்கன்று. “அதன்றாள் வழியே முளையோங்குபு” (சீவக.223) ம. முள, து, முளே, க. மொளே, தெ. மொள. முளை-முளையான் - சிறுகுழந்தை. இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது. (உ.வ.)

"

முள்-மள்-மள்ளன் - 1. இளைஞன், “பொருவிறல் மள்ள” (திருமுரு. 262. 2. குறிஞ்சி நிலத்தில் வாழ்வோன். (சூடா) 3. மறவன், வீரன். “களம்புகு மள்ளர்” (கலித்.306).

மள்-மழ - 1. இளமை. “மழவுங் குழவும் இளமைப் பொருள்”. (தொல். உரி 14) 2. குழந்தை. “அழுமழப் போலும்” (திருக்கோ.147). மழ-மழவு. (பிங்) மழவு-மழவன். 1. இளைஞன். "மழவர்தம னையன மண வொலி" (கம்பரா. நாட்டுப். 50) 2. மறவன். “மழவர் பெரும்" (புறநா -96).

மழமழல்-மழலை. 1. இளமை. “பெருமழலை வெள்ளேற்றினர்"

(தேவா. 579)

2. குழந்தைகளின் திருந்தாச் சொல். “தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்” (குறள். 66). 3. மென்மொழி. “மழலைவாயின் முறுவற் றையலாள்" (சீவக.181)