பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




23 தலைமைக்குடிமகன்

மக்கள் வாழ்க்கைக்கு எத்துணையோ பல பொருள்கள் வேண்டி யிருப்பினும், அவை யெல்லாவற்றுள்ளும் இன்றியமையாதது உணவு அ வ ஒன்றே. அதனால், உணவை விளைவிக்கும் உழவன் எல்லாருள்ளும் உயர்ந்தவனாகின்றான். இது பற்றியே, திருவள்ளுவர் தம் ஒப்புயர்வற்ற உலகப் பொது நூலில், குடி செயல் வகையின் பின் உழவதிகாரத்தை வைத்தார்.

உணவளிப்பவன்

உழுவார் உலகத்திற் காணியர், தாற்றா(து) எழுவாரை யெல்லாம் பொறுத்து."

(குறள்.)

என்னுங் குறளால், உழவர் உலகமாகிய தேருக்கு அச்சாணியாவர் என்றுரைத்தார் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார். ‘அச்சாணியில்லாத தேர் முச்சாணும் ஓடாது, செயற்கை விளைவின்றி, மக்களினம் பெருத்த உலகம் ஒரு நாளும் நடைபெறாது. உணவு விளைத்தலை அதன் அருமை பற்றி அளித்தல் என்றது உயர்வு நவிற்சி.

விருந்தோம்பி வேளாண்மை செய்பவன்

விருந்து புதுமை. புதுமை. புதிதாய் வந்த அயலார்க்கு அன்புடன் உணவளிப்பதே விருந்தோம்பல். வேளாண்மையாவது பிறரை விரும்பிச் செய்யும் பல்வகையுதவி. இவையிரண்டும், தாமாகவே உணவை விளைப்ப வரும் தலைமுறை தலைமுறையாய்ப் பிறரைப் பேணிப் பண்பட்டு வருபவருமான உழவர் குடியினர்க்கே இயலும். வேளாண்மை செய்வதிற் சிறந்ததினாலேயே, உழவர்க்கு வேளாளர் எனப்பெயர். உழுதுண்பாரும் உழுவித்துண்பாருமாக. வேளாளர் இருவகையர்.

"வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்” என்றார் நல்லாதனார்.

இரப்போர் சுற்றத்தான்

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது

கைசெய் தூண்மாலை யவர்."

என்றார் திருவள்ளுவ நாயனார்.

(குறள்.)