பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




27

வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழா

முகவுரை:

வாழ்த்துரை விளக்கம்

கன்னி உ-ஆம் பக்கல் (18-9-74) அறிவன் (புதன்)கிழமை பிற்பகல் 5 மணிக்கு, சென்னை மாநகர் நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில், மாண்புமிகு கல்வியமைச்சர் பர். (Dr.) நாவலர் இரா. நெடுஞ்செழியனார் அவர்கள் தலைமையில், மாண்புமிகு முதலமைச்சர் பர் (Dr.) கலைஞர் மு. கருணாநிதியார் அவர்கள் தொடங்கி வைத்த வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழாவில், மாண்புமிகு பொதுப்பணித் துறையமைச்சர் ப. உ. சண்முகனார் அவர்கள் வேண்டுகோட் கிணங்கி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறையமைச்சர் பேரா. க. அன்பழகனார் அவர்கள் முன்னிலையில், நான் வழங்கிய வாழ்த்துரை நேரமின்மைபற்றி முற்றுப் பெறாமையால், அதைப் பலர்க்கும் பயன் படுமாறு முற்றுவித்தற் பொருட்டு, இந்நெடு விளக்கக் கட்டுரையை வரையலானேன்.

1. வாழ்த்துரை வகைகள்

இயன்மொழி வாழ்த்து, புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து என வாழ்த்துரை மூவகைப்படும்.

ஒருவருடைய சிறந்த பண்புகளையும் அரிய ஆற்றல்களையும் எடுத்துரைத்துப் புகழ்வது அல்லது வாழ்த்துவது, இயன்மொழி வாழ்த்து,

ce

அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும்"

୧୧

‘மயலறு சீர்த்தி மான்றேர் மன்னவன்

இயல்பே மொழியினும் அத்துறை யாகும்.”

(தொல். புறத். 35).

(பு. வெ. 9:195).

கடவுள் (அல்லது நீ வணங்கும் தெய்வம்) உன்னைப் பாதுகாக்க, நீ வழிவழி செல்வத்தோடு சிறந்து விளங்குக என்று, ஒருவரை வாழ்த்துவது புறநிலை வாழ்த்து.

வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே....."

(தொல். செய். 109),