பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 43.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் தனித்தியங்குமா?

வெட்டம் (வெளிச்சம்)

வெட்ட (தெளிவான)

19

வெட்டை (வெளி, வெறுமை, பயனின்மை)

இங்குக் காட்டப்பட்டுள்ள சொற்களெல்லாம், வெண்ணினத்தைக் குறிக்கும். வெண் என்னும் ஒரேயடியினின்று பிறந்து வெண்மைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு காட்சிப் பொருள்களையுங் கருத்துப் பொருள்களையுங் குறிப்பனவாகும். இவ்வடியினின்று பிறந்த வேறு சில சொற்களுமுள. அவை விரிவஞ்சி இங்கு விடப்பட்டுள.

சில பொருள்கட்குப் பிறவற்றிற்கில்லாத சிறப்பியல்புண்டு. அதனை யும் நம் முன்னோர்கண்டு, அதற்கேற்பப் பெயர்களை அமைத்திருக் கின்றனர்.

எ கா : வாழை (அடி வழ வழவென்றிருப்பது).

இங்ஙனமே பிற மொழியாளரும் தத்தம் மொழியிற் சொற்களை ஆக்கியிருக்கின்றனர். ஆகவே, ஆங்கிலக் குறியீடுகளின் வேர்ப் பொருளையோ அவற்றாற் குறிக்கப்படும் பொருள்களின் சிறப்பியல்பை யோ அறிந்து கொள்ளின், அறிவியலும் கம்மியமும் பற்றிய எல்லாச் சொற்களையும் எளிதாய்த் தமிழில் அமைத்துக் கொள்ளலாம் சொற்றிரி பிற்கேற்ற ஈறுகள் தமிழில் ஏராளமாகவுள்ளன. தொழிற் பெயரீறுகள் மட்டும் தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், பாடு, காடு, அரவு, ஆனை, மை, து, இல், ஆல், அனை, அனம், இனம், அணம், இணம், அடம், இடம், அரம், இதம் முதலியனவாக முப்பதிற்கும் மேலுள்ளன. இவற்றொடு, வினை முதலீறுகள் செயப்படு பொருளீறுகள் முதலிய ஈற்றுவகைகளையும், குறுமைப் பொருள், பெருமைப் பொருள் முதலியனபற்றிய முன் பின் ஒட்டு வகைகளையும், சேர்ப்பின் எத்துணையோ பலவாகும். இலத்தீன் கிரேக்கம் முதலிய பல மொழிகளினின்று ஆங்கிலம் கடன் கொண்டுள்ள ஈறுகளை யும் ஒட்டுக்களையும் ஒத்த சொல்லுறுப்பு வளம், தமிழ் ஒன்றிலேயே இயல்பாக அமைந்து கிடக்கின்றது.

-

Electricity என்னும் ஆங்கிலச் சொல், அம்பர் என்னும் நறுமணப் பொருளைக் குறிக்கும் electron என்ற கிரேக்கச் சொல்லினின்றும் பிறந்தது. அம்பர் என்பது தமிழில் மின்சாரம் எனவும் பெறும். 12ஆம் நூற்றாண்டின தான அடியார்க்கு நல்லாருரையில் அம்பர் என்னுஞ் சொல் வந்திருத்தலால், அதையும் தென் சொல்லெனக் கொள்ள இடமுண்டு. மின்னாற்றலைக் குறித்தற்கு அம்பர் என்னுஞ் சொல்லினின்று ஆம்பரியம் என்றொரு சொல்லைத் திரித்துள்ளனர் புதுச்சேரி வாணர். சென்னை நாட்டுத் தமிழில் மின்சாரம் என்னுஞ் சொல் ஏற்கெனவே புனையப் பெற்றுள்ளது. அதை மின்(னம்) என்றும் மாற்றிக் கொள்ளலாம்.