பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

எல்லா தோழீ. “கடைமணி யின்குரல் காண்பென்காண் எல்லா” (சிலப்.20:3).

T

எல்லா - எல்லாவோ = தோழீ. “எல்லாவோகாதலற் காண்கிலேன்’” (சிலப். 18: 11 - 2).

எல் - எல்லே = தோழியை விளிக்குஞ் சொல்.

“கொடிய என்னெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே’”

(திவ். திருவாய். 5:8:5)

எல் - எல்லோ = வியப்பும் இரக்கமும் உணர்த்தும் இடைச் சொல் (நெல்லை வழக்கு)

எல்

எல்

-

-

எல. இது தமிழில் வழக்கற்றது.

எலா. இதுவும் தமிழில் வழக்கற்றது.

எல, எலா என்னும் இரு சொற்கள், இருபாற் பொது விளிகளாகத் தெலுங்கரிடை வழங்கி வருவதாகச் சொல்லப் படுகின்றது.

எல என்பதையும், அதன் திரிபான சில சொற்களையும் பற்றி, கிற்றல் கன்னட அகரமுதலி பின்வருமாறு கூறுகின்றது:

௧. எல (ela) = உடன்படுதலைக் குறிக்கும் ஓர் இடைச்சொல்.

௧. எலகெ (elage) = பெண்டிரை விளிக்குஞ் சொல்.

க. எலவொ, எலவோ = வலிமிக்க வியப்பிடைச் சொற்கள்.

க. எலா

=

நண்பரை அல்லது நெருங்கிப் பழகியவரை விளிக்குஞ் சொல்

க. எலெ. எலே = எலா.

க.எலெகெ (elage) = பழகிய பெண்டிரை விளிக்குஞ் சொல்.

௧. எலொ, எலோ = எலா.

எல் - எலு- எலுவ - எலுவன் = தோழன் (திவா.)

எலுவன் - எலுவல் = தோழன். “அரவெழுதிய கொடியு முடையவ னெலுவலும்” (பாரத. பதினாறாம். 28).

எலுவன் எலுவ (MOவே.)

-

எலுவன் எலுவை = தோழி. “உனக்கெலுவை யாகுவதெ னெண்ணம்” (பாரத. நாடுகரந். 33).

எலுவன் - எலுவி = தோழி. (தொல். பொருள். 26, நச். உரை).