பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) முக - மோ. மோப்பக் குழையு மனிச்சம்” (குறள். 90).

66

மோ - மோப்பு - மோப்பம்.

-

முகதலை = பெண்டிர் சேலை முகப்பு(முன்றானை).

-

=

முக முகப்பு 1. முன்னிலை. "இருந்திடா யெங்கள் கண் முகப்பே’2. முற்பகுதி. 3. வீட்டின் முன்கட்டடம். “முகத்தணிந்த முகப்பு " (அரிச். பு. இந்திர. 20). 4. அணிகலப் பொருத்துவாய். 5. முகதலை. முகம் முகமன்

“முன்னையிற்

=

1. மதிப்புரவுச் சொல், பாராட்டுரை.

புனைந்து முகமனளித்தும்” (கல்லா. 13). 2. வழுத்து. “புகழ்ந்துமுன் னுரைப்பதென் முகம்மனே” (தேவா. 863 : 3). 3. முகத்தெதிர் உயர்வு நவிற்சி.

முகமாதல் = உடன்படுதல் (சீவக. 1120, உரை).

முகமை = முதன்மை, தலைமை. முகமையாயிருந்து எடுத்து நடத்தினான். முகமை - முகாமை.

முகம் - முகர். முகர்தல் = மோத்தல். முகர் - மோர்.

முகர் - முகரி 1. முன்புறம். 2. தொடக்கம். 3. தலைமை. 4. மூக்கினடி.

-

முகரி முகரிமை = 1. தலைமை. “முகரிமை யடைந்தவன் றோல் முகத்தவன்” (கந்தபு. கயமுகனுற். 49). 2. பேரறிவு. "முகரிமை ம சானற்றவர்” (சேது. பலதீ. 30).

முகர் - முகரை = 1. முகம் (இழிவுக் குறிப்பு). அவன் முகரையைப் பார் (உ.வ.). 2. முகவாய்க்கட்டை. 3. மூக்கினடி. "முகரையா லுழுத தொய்யில்” (திருக்காளத். பு. கண்ணப்ப.3). 4. மூக்கல்லாத முகப்பகுதி. அவன் மூஞ்சி முகரை யெல்லாங் கரி (உ.வ.). தெ. மோர, க. மோரெ, இந். முக்ரா (kh).

முகரைக் கட்டை = 1. முகம். 2. முகவாய்க் கட்டை.

முகவணை = 1. முகப்பு. 2. முகவுரை. 3. வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருக்குமிடம். 4. முகவணைக்கல். “நிலைகால் அருகணை முகவணை... கட்டினதும்” (கோயிலொ. 138)

முகவணைக்கல் = வாசலின் மேலுள்ள உத்தரப் படிக்கல் (W.).

முகவழி = மூலம். அவன் முகவழியாகப் போகவேண்டும்.

முகவாசல் = தலைவாசல்.