பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) செப்புதல் (பதிற்றுப். 82 : 1), தெய்வத்தச்சன் (கம்பரா. ஊர்தேடு. 18), தெய்வத்தன்மை, தெய்வத்தீர்ப்பு, தெய்வத் தீர்வை, தெய்வப்பகை (சீவக. 364), தெய்வப்படை (கம்பரா. அதிகாயன். 50), தெய்வப்பலகை (திருவாலவா. 15 : 4), தெய்வப் பாடல் (சிலப். 3 : 135, உரை), தெய்வப்பாவை (சீவக. 657), தெய்வப்பிறப்பு, தெய்வப் பிறவி, தெய்வப் புணர்ச்சி (திருக்கோ. 7, கொளு), தெய்வப் புலமை (குறள். சிறப்புப் பாயிரம்), தெய்வப்புள் (திவ். பெரியதி. 3 : 3 : 6), தெய்வப் பெண் (திருவாச. 19 : 6), தெய்வபத்தி, தெய்வமணம், தெய்வமணி (பிங்.) (கம்பரா. உருக்காட்டு. 68.), தெய்வ மயக்கம் (சிலப் 12 : 51, உரை), தெய்வமயக்கு (மணிமே. 21 : 109), தெய்வமரம் (பிங்.) தெய்வமாடம் (பெருங். இலாவாண. 7: 143), தெய்வமுனி, தெய்வ வணக்கம் (காரிகை. பாயி. 1, உரை), தெய்வ வீடு (கம்பரா. நகரப். 32).

தெய்விகம் = தெய்வத் தன்மை. ‘இகம்' பண்புப்பெயரீறு.

தெய்வு - தெய் = தெய்வம் (பிங்.).

தேய் - தீய். தீய்தல் = 1. எரிந்து போதல். 2. சோறு முதலியன பற்றிக் கருகுதல், பயிர் முதலியன வாடிக் காய்தல்.

தீய்த்தல் = தீய் என்பதன் பிறவினை.

தீய் - தீயல் = காய்ச்சும் குழம்புவகை. எ-டு : உப்புத்தீயல்.

-

தீய்வு - தீவு - தீவம் = விளக்கு. தீவம் - வ. தீப (p).

தீவு - தீவனம் = 1. எரிவு. 2. எரியும் பசி. 3. பசியைத் தணிக்கும் உணவு. 4. கால்நடைக்கு உணவாக இடும் கூளம்.

தீவனம் - வ. தீபந.

தீய் - தீ. தீதல் = 1. எரிந்து போதல். 2. சோறு கறி பற்றிக் கருகுதல். 3. பயிர் வாடிச் சருகாதல். 4. சினத்தல். 5. அழிதல்.

தீத்தல் = தீ என்பதன் பிறவினை.

தீ = 1. நெருப்பு. 2. ஒளிவிளக்கு. 3. செரிமான வெப்பம். 4. கடும்பசி. 5. எரிநரகம். 6. தீமை. 7. சினம்.

தீ - தீங்கு = 1. தீமை. 2. துன்பம். 3. குற்றம்.

தீ - தீமை = நன்மைக்கு எதிரானது.

தீ- தீம்பு = 1. தீமை. 2. கேடு. 3. குறும்பு.

தீய = (பெ.எ.) 1. கெட்ட. 2. கேடு செய்யும்.

தெய்வம் - Gk. theos, L. deus, Skt. dyaus, god, deity.