பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

புகு என்னும் தமிழ்ச்சொல், கிரேக்கத்தில் பகு அல்லது பக என்று திரிந்தபின், அதற்கினமான இந்திய ஆரிய முன்னை மொழியில் (pre - Indian East Aryan) புஜ் (bhuj) என்று திரிந்துள்ளது.

ஒ. நோ : பகு வ. பஜ் (bhaj).

-

சமற்கிருதத்திற்கு முந்தின வேத மொழியிலேயே இத் திரிபு காணப்படுவதால், இது வேத ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே நிகழ்ந்திருக்க க வேண்டும். மிடற்றொலி அண்ணவொலியாகத் திரியும் போது, எடுப்பிலா வொலி (voiceless sound)

எடுப்

பொலியாகவும், எடுப்பொலி (voice sound) எடுப்பிலா வொலியாகவும் திரிவதே பொதுவியல்பு.

எ-டு : க - ச:குடிகை

குடிசை.

g - j : L. ago - Skt. aj (to drive).

இம் முறைப்படி, புகு என்பதன் திரிபான பகு (phag) என்னும் மேலையாரியக் கிரேக்கச் சொல் கீழையாரியத்தில் புஜ் (bhuj) என்று திரிந்துள்ளது. எடுப்பிலாவொலி எடுப்பொலியாகத் திரிவதும் இயல்பே. எ-டு : E. acre, L. ager, Gk. agros.

E. triple - E. treble.

bhuj, to eat, eat and drink, enjoy a meal, consume, enjoy, use, possess, make use of, utilize, exploit, suffer, experience, undergo, R.V., AV., Up., MBh., Kāv.

bhukta, enjoyed, eaten, made use of, possessed etc.

bhukti, eating, enjoyment, consuming, frution, possession, usufruct. bhuktvā, having enjoyed or eaten or possesed.

bhuji, the granting of enjoyment, favour, RV.

bhujishya. granting food, useful, AV.

bhoktru, one who enjoys or eats, Maitr Up.

bhoga, enjoyment, eating, feeding on, R.V.

bhogin, enjoying, eating, having, wealthy; a king, a concubine. bhōgya, to be enjoyed, to be used.

bhoja, bestowing enjoyment, bountiful, liberal, RV. leading a life of enjoyment, BhP., a king.

bhojaka, eating, being about to eat, giving to eat, nourishing.