பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

137

புல்லுதல் = துளைத்தல்.

16. பள்ளி

புல் = உட்டுளை, துளை, உட்டுளை நிலைத்திணை வகை.

புல் - புள் - புழு. புழுத்தல் = புழுத்துளைத்தல்.

புல் - பொல். பொல்லுதல் = துளைத்தல்.

பொல்லம் பொத்துதல் = நார்ப் பெட்டியின் ஓட்டை யடைத்தல்.

பொல்லாமணி = துளையில்லா மணி.

பொல்லாப் பிள்ளையார் = உளியிடாப் பிள்ளையார் படிமை. பொல் - பொள். பொள்ளுதல் = துளைத்தல்.

பொள்ளல் = துளை, ஓட்டை.

"சீதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு”

(நன்னெறி, 12)

புள் - பள் - பள்கு. பள்குதல் = பதுங்குதல், பள்ளமான இடத்தில் மறைதல். பள்கு பழகு.

-

பள் - பள்ளம் = 1. தாழ்விடம். 2. தாழ்நிலம் . 3. தாழ்மட்டம், தாழ்வு. 4. குழிவு. 5. கன்னத்தில் விழுங்குழிவு. 6. ஆழம். 7. கிடங்கு. 8. குழி.

.

துளைத்தல் தோண்டுதல். தோண்டும் நிலம் முதலிற் பள்ள மாகும்; பின்பு கிடங்காகும்; அதன் பின் குழியாகும் ; குழி ஒன்றை ஊடுருவின் துளையாகும். தோண்டத் தோண்ட ஆழம் மிகும்.

பள் - பள்ளி. பள்ளிக் கிருத்தல் = விதைகள் சேற்றிற் பதிந்து கிடத்தல் (நாஞ்சில் நாட்டு வழக்கு).

-

பள் - பள்ளை = குள்ளம்.

பள்ளையன் = குள்ளன், குறுகிப் பருத்தவன்.