பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) பள்ளையாடு - குள்ளமான ஆட்டுவகை.

=

குள்ளம் பள்ளம் போல் தாழ்மட்ட மாயிருத்தலால், யெனப்பட்டது.

பள்ளை

பள்ளை- பள்ளையம் = தாழ் மட்டமான (தட்டையான) உண்கலம். ம. பள்ளையம்.

பள்ளையம் போடுதல் = சிறு தெய்வத்திற்குக் கீழே படைத்தல்.

பள்ளி = 1. தாழ்வு. 2. தாழ்வான இடம், தாழ்மட்டம். 3. தாழ்வான வீடு அல்லது குடிசை. 4. தாழ்வான வீடுகள் சேர்ந்த சிற்றூர். 5. தாழ்வான இடைச்சேரி. “காவும் பள்ளியும்” (மலைபடு. 451). ஒ.நோ: படு - பாடு - படுபாடு பாடி = இடைச்சேரி. படுத்தல் = தாழ்வா யிருத்தல். 6. நெடிதாய் எழுந்து நிற்கும் நிலையும் குறிதாய் அமர்ந்திருக்கும் நிலையும் இன்றித் தாழ்வாய் நில அல்லது அடித்தள மட்டமாய் நீளக்கிடக்கும் நிலை. 7. அங்ஙனங் கிடத்தல், படுத்தல். 8. படுக்கும் இடம், விலங்கு துயிலிடம். 9. படுக்கும் பாயல், பரப்பல், விரிப்பு, மெத்தை. 10. படுத்துத்தூங்குதல், தூக்கம். 11. படுக்கும் அறை. 12. படுத்துத் தங்கும் வீடு, வீடு (மடைப்பள்ளி = சமையல் செய்யும் தனி வீடு). 13. அரசன் வீடாகிய அரண்மனை. 14. தெய்வ வீடாகிய திருக்கோவில். “கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்” (குறள். 840) ; சமணக் கோயில், புத்தக்கோயில். 15. துறவியர் தங்கும் மடம். 16. முனிவரிருக்கை. 17. அறச்சாலை. 18. தங்கும் இடம். 19. இடம். “சொல்லிய பள்ளி நிலையின வாயினும்” (தொல். எழுத்து. 100). 20. கோவிலில் அல்லது மடத்தில் நடைபெறும் துவக்கக் கல்விச்சாலை. 21. பணிமனை. “தச்சன் வினைபடு பள்ளி” (களவழி. 15). 22. பல வீடுகள் சேர்ந்த பேரூர், பல காரை வீடுகள் சேர்ந்த நகர் அல்லது நகரம். 23. ஊர்ப் பெயரீறு. எ-டு : குராப்பள்ளி, திருக்காட்டுப் பள்ளி. தெ. பல்லி (b), மதனபல்லி, பங்கனப்பல்லி. க. ஹள்ளி. மாரண்டஹள்ளி. பழங்கன்னடத்தில் பள்ளி யென்று வழங்கிய ஊர்ப்பெயர் ஈறுகளெல்லாம், புதுக் (ஹொச) கன்னடத்தில் ஹள்ளி என்று மாறிவிட்டன.

பள்ளி - வ. பல்லீ, பல்லி (கதாசரித்சாகர) = சிறு வீடு, சிற்றூர்.

பல்லி என்னும் வடசொல் வேதத்தில் வழங்காது பிற்காலச் சமற்கிருதத்திலேயே வழங்குதலும் பகரமுதல் எடுப்பொலி பெறாமையும், வேர்ச்சொல் இன்மையும், வேறு பொருள் கொள்ளாமையும், அது தமிழ்த் திரிசொல் என்பதைக் தெள்ளத் தெளிவாகக் காட்டும். ஆயினும், அதைத் தமிழ்ச்சொற்கு மூலமென்று