பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

மாந்தன் இயக்கம்

5

அல்லது செலவு நிலத்தின்மேலும்

மலையின்மேலும் நிகழ்வதால், முன்மைச்சுட்டு இடம் நோக்கி உயர்ச்சிச் சுட்டுமாகும்.

காலமுன் இடமுன் என முன் இருவகைப்பட்டு ஒன்றோ டொன்று மயங்குவதால், முன்மைச்சுட்டுப் பின்மைச் சுட்டாகவும் இலக்கியத்தில் அருகி வழங்கும்.

ஒ.நோ. : L. sursum deorsum up and down, backwards and

forwards.

ஊ - உ : முன்மைச்சுட்டு

முதற்காலத்தில் நெடிலாகவே யிருந்த சுட்டுகள், பிற்காலத்திற் குறிலாகவுங் குறுகின.

உவன் = முன்னாலிருப்பவன்.

உது = முன்னாலிருப்பது.

உது, உதோ= முன்னே (இடைச்சொல்).

உதோள், உதோளி = முன்னிடத்தில்.

ஊன், ஊம், ஊங்கள்- வழக்கற்ற முன்னிலைப் பெயர்கள்.

உ : உயர்ச்சிச்சுட்டு

உக்கம், உகப்பு, உங்கு, உச்சி, உத்தரம், உம்பல் (யானை), உயர், ஊர்தல் (ஏறுதல்), உவண், உறி, உன்னு என்பன உயர்ச்சி பற்றிய உகரச் சுட்டடிச் சொற்கள்.

=

உம் - உம்பு - உம்பர் (பெ.) = 1. மேலிடம். "மாடத் தும்பர்” (ஞானா. 9:6). 2. உயர்ச்சி (திவா.). 3. மேல்வெளி, வானம், விசும்பு. “உம்ப ருச்சியிற்....கதிர் பரப்பு கடவுள்" (திருவிளை. தண்ணீர். 22).4. தேவருலகம். “உம்பர்க் கிடந்துண்ண” (நாலடி. 37). 5. தேவர். “ஒலிகடல்சூ ழுலகா ளும்பர் தாமே” (திவ். பெரியதி. 7: 8 : 10).

(குறிப்பு வினையெச்சம்) 1. அப்பால், “ஆறைங் காதநம் மகநாட் டும்பர்” (சிலப். 10 :42). 2. மேலே. "யான் வருந்தி யும்ப ரிழைத்த 10:42).2. மேலே."யான் நூல்வலயம்” (பெரியபு. கோச்செங். 5).

ம. உம்பர் = தேவர்.

உம்பர் என்னுஞ் சொல் தேவரைக் குறிக்கும்போது, உம்பு + அர் என்று பிரிக்கலாம்.

இந். ஊப்பர் = மேலே. வஹ் கித்தாப் அல்மாரீ கே ஊப்பர் ஹை = அந்தப் பொத்தகம் நிலைப்பேழைக்கு மேலே யிருக்கிறது.