பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

66

161

சேர்ந்த முழுநாள். ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும்” (நாலடி. 169). 9. பகலைச் செய்யுங் கதிரவன். “பன்மலர்ப் பூம்பொழிற் பகன்முளைத் ததுபோல்” (மணிமே. 4:92).

ம. பகல், க. பகல் (g), தெ. பகலு. (g).

பகல் - பகலவன் = கதிரவன். “பகலவ னனையானும்” (கம்பரா. கங்கை. 61). பகல் - பகலோன் = கதிரவன்.

பகல் - பால் = 1. பகுத்தல், பகுத்துக் கொடுக்கை. “பாலுங் கொளாலும் வல்லோய்” (பதிற்றுப்.10 : 19). 2. பகுதி. கூறு. "இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே” (தொல். புறத். 16). 3. பொருட்கூறு. “பால்வரை கிளவி” (தொல். எழுத்து. 165). 4. வகை. “முப்பாற் புள்ளியும்” (தொல். எழுத்து. 2), "மடவா ரைம்பா லணையும்” (திவ். பெரியதி. 7: 5: 3), 5. பாதி. “பானாளிரவில்”(கலித்.90). 6. பக்கம். “பாஅனின்று கதிர்சோரும்” (புறம். 22). “ஒருபாற் கோடாமை சான்றோர்க் கணி” (குறள். 118). 7. குலம். “கீழ்ப்பா லொருவன் கற்பின்” (புறம். 183). 8. திசை (பிங்.). 9. இடம் (யாழ். அக.). அப்பாற் போ (உ.வ.). 10. வேளை. அப்பால் வா (உ.வ.). 11. இருதிணை ஐம்பாற் பிரிவு. “இருதிணை மருங்கின் ஐம்பா லறிய” (தொல். கிளவி. 10). 12. ஈரெண் பாகுபாடு. “பன்மைப் பாலாற் கூறுதல்” (தொல். சொல். 62. இளம்பூ.). 13. இன்பதுன்பக் கூறு. “பால்வரை தெய்வம்” (தொல். கிளவி. 58). 14. நூற் பெரும்பிரிவு. அறத்துப்பால் (திருக்குறட் பிரிவு).

பகு - பகவு = 1. பிளவு, வெடிப்பு, பகுப்பு (யாழ். அக.). 2. துண்டு. “எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்” (குறள். 889). 3. பங்கு (யாழ். அக.).

பகவு - பகவன் = உயிர்கட்கெல்லாம் உணவைப் பகுத்தளித்துக் காப்பவன், கடவுள். “பகவன் முதற்றே யுலகு” (குறள்.1).

பகு - பக்கு. பக்கெனல் = வெடித்தற் குறிப்பு.

பக்கிசைத்தல் = (செ.கு.வி.) விட்டிசைத்தல். - (செ. குன்றா வி.) வேறுபடுத்திக் கூறுதல். ‘அதுவும் இதுவும் எனப் பக்கிசைத் தோதப்பட்ட” (சி.போ. சிற். 12 : 4 உரை).

பக்கு = 1. பிளப்பு (W.). 2. கவர்படுகை “தங்கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து (தேவா. 17 : 3). 3. பை. “பக்கழித்துக் கொண்டீ யெனத்தரலும்” (கலித். 65: 14), “பகர்வர் பக்கிற் றோன்றும்” (ஐங்குறு. :

271).

பக்கு விடுதல் = 1. பிளத்தல்.