பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை”

(ஷை க்ஷை 4) என்று தொல்காப்பியங் கூறுவதால், பல்வேறு உயிரினங்களிலும் சிற்சில உயிரிகள் பிள்ளையென்னும் இளமைப் பெயர் பெற்றிருந்தமை அறியப்படும்.

வீட்டுப் பூனைக்குட்டி பாலூட்டி வளர்க்கப்படுவது பெரும் பான்மை. ஆதலால், பூனைப்பிள்ளை யென்பது, பெருவழக்குப் பற்றி, பிள்ளையென்னும் பொதுப் பெயராலேயே குறிக்கப்பட் டிருப்பது இயல்பு. பிள்ளைபோல் வளர்க்கப்படுவது, பெரிதான பின்பும் அப்பெயர் பெறும். அணிற்பிள்ளை கீரிப்பிள்ளை முதலிய பெயர்களை நோக்குக. (குட்டி ஆட்டுக்குட்டியையும், கன்றுக்குட்டி என்பது மாட்டுக்கன்றையும், சிறப்பாகக் குறித்தலை யும் நோக்குக.)

என்பது

பிள்ளை யென்னுஞ்சொல் தெலுங்கிற் பில்லி யென்று திரியும். ஒ.நோ: தள்ளை (தாய்)- தல்லி. பில்லி- இந். பில்லீ(billi). பில்லி யென்பது இலத்தீனில் felis அல்லது feles என்று வழங்கும். உயர்திணையில் இருபாற்கும் பொதுவான பிள்ளை யென்னும் இளமைப்பெயர், இலத்தீனில் filius என்று மகனையும், filia என்று மகளையும் குறித்து வழங்குதல் காண்க. பிள்ளை என்பது, வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தில் ஆண்பிள்ளையையும், பாண்டிநாட்டுப் பகுதியிற் பெண்பிள்ளையையும், சிறப்பாகக் குறிப்பது, வழக்கு வேறுபாடு பற்றியதே.

பூசை அல்லது பூனை யென்பது வீட்டுப் பூனையையே. காட்டுப் பூனை வெருகு எனப்படும். வெருவத்தக்க தோற்றமும் வலிமையும் உடையது வெருகு. வெருவுதல் அஞ்சுதல். வெருகு வீட்டில் வளர்க்கப்பட்ட பின் பூசையெனப் பெயர் பெற்றது. “வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும் ” என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. வீட்டுப்பூனை இலத்தீனில் Telis domestica எனப்படும்.

feline (adj.) = cat like. felid cat like. felid = one of the Felidoe or cat-tribe.

3) விடரகன்

_

விடுதல் = பிளத்தல், விடு- விடர் = பிளவு, பிளப்பு.

விடரவன்= (பகலிற் கண்பிளவுள்ள) பூனை (யாழ். அக.). விடரவன் - விடரகன்– விடரகம் - விடருகம் - விடரூகம் = பூனை (நாமதீப. 203).

விடரகம்- விடாரகம்– வ. விடாரக = பூனை.