பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

பூனைக்கு மேலை மொழிகளெல்லாவற்றிலும் பெரு வழக்காய் வழங்கும் பெயர், பல்வேறு வகைகளில் திரிந்திருப்பினும் கொத்தி என்னும் சொல்லையே ஒத்துள்ளது.

Gk. katta, kattos; Mod. Gk. gata; L. catus, catta, cātus, cattus, Late Latin. cattus, catta.

It. gatto; Sp., Pg. gato; Cat. gak; Pr. cat; ONF. cat; F. chat (fem. gatta, gata, cata, cate, chate, chatte).

E. cat; OE., ME. cat, catt, catte, ON. kott-r, kattus; keta, fem; Sw. katt, katta; Da. kat; MLG. katte; MDu. katte, kat; D. kat; OHG. kazza, chazza, chataro; MHG., Mod. G. katza; MHG. katero, kater; Mod. G. and Du. kater he cat.

Oir. cat (masc.); Gael. cat com. W. kath; Welsh and Cornish. cath; Breton kaz; Vannes kac'h m. OCo. kat.

Nubian kadis; Arab qitt, tomcat, qitta, cat.

Slavonic kot; OSlav. kot'ka; Bulg. kotka; Slovenish kot m; Russ. kot m. kotchka, koshka; Pol. kot (koczur m.); Boh. kot m. kotta f.; Sorabian kotka; Lith. kate; Finnish katti.

Derivatives

Chatoyant, of a changeable colour, shining like the eyes of a cat.

caterpillar fr. LL. catta pilose = hairy cat.

caterwaul fr. LG. caterwanlen

=

to cry like cats.

meerkat fr. MDu. meer catte = sea cat.

catteny place where cats are bred.

kitten, catkin, cattish, catishly, catishness, catling, catty, cattily, catliness

etc.

ஐரோப்பாவில் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை பூனையிருந்த தில்லையென்றும், அது எகிபது நாட்டிலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்டதென்றும், cat என்னும் அதன் பெயர் எகிபதியச் சொல்லென்றும், மாக்கசு முல்லர் கூறுகின்றார். பூனை நீண்ட காலமாக எகிபது நாட்டில் வளர்க்கப்பட்டு வந்ததனாலும், ஓர் எகிபதியப் பெண்தெய்வம் பூனைத்தலை கொண்டிருந்ததனாலும், ரோப்பாவிற்கு எகிபது அண்மையிலிருப்பதனாலும், அவர் கூற்றுப் பொருத்தமாகவே தோன்றுகின்றது. ஆயின், குமரிநாடே மாந்தன் பிறந்தகமாதலாலும், தமிழகத்திற்கு எகிபதினோடு நீண்டகாலமாக நீர்வாணிகமும் நிலவாணிகமும் இருந்து வந்ததனாலும், வெருகு தமிழகக் குறிஞ்சிநிலக் கருப்பொருளாதலாலும், பூனை தமிழகத்தி