பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

_

21

(stand)-நிலையம் நிலையம் (station), மதி (moon) - மதியம் (fullmoon), விளக்கு (lamp) - விளக்கம் (light house).

அரங்கு – அரங்கம், கடுகு கடுகம், குண்டு - குண்டம், குன்று - குன்றம், சங்கு - சங்கம், துண்டு - துண்டம், நகர்- நகரம், முத்து - முத்தம் முதலிய பல சொற்களில் அம்மீறு தன் பெருமைப்பொருளை யிழந்துள்ளது. இங்ஙனமே உலகம் என்பதும்.

குடும்பு - குடும்பம் என்பதிலோ, அம்மீறு தன் சிறப்புப் பொருளை யிழந்ததுமன்றி, அதற்கு நேர்மாறான சிறுமைப் பொருளையுந் தருகின்றது. குடும்பம் என்பது, சிறிதும் பெரிதுமான ஒரு தனிக் குடும்பத்தையே குறிக்கும் போது, குடும்பு என்பது பல குடும்பஞ் சேர்ந்த சேரியை அல்லது ஊர்ப் பகுதியைக் குறிக்கின்றது. (உத்தரமேரூர்க் கல்வெட்டைப் பார்க்க.) பாண்டியராட்சியும் பண்டைப் பைந்தமிழ்க் கழகமும் இன்மையே, இத்தகைய வழுவழக்கிற்குக் கரணியம்.

மொழி வரலாற்றையும் சொல்லமைப்பையும் அறியாத அல்லது பிறழவுணர்ந்த தமிழ்ப்புலவர் சிலர், உலகம் என்னுஞ் சொல்லின் கடைக்குறையே உலகு என்னும் வடிவென்று கொள்வர்.

“பகவன் முதற்றே யுலகு” (குறள்.1) "நீரின் றமையா துலகெனின்” (ஷ 20) “வகைதெரிவான் கட்டே யுலகு” (ஷெ 27) "பெருமை பிறங்கிற் றுலகு (ஷை 23)

“உலகவாம் பேரறி வாளன் றிரு’” (ஷ 215)

(ஷை

“என்னாற்றுங் கொல்லோ வுலகு” (ஷை 211)

எனச் செய்யுள் வழக்கிலும்; உலகளவு, உலகியல், உலகாளி, உலகழிவு என உலக வழக்கிலும்; உலகு என்னுஞ் சொல் உலகம் என்னும் வடிவு போன்றே பெருவழக்காய் வழங்குதலையும், சொல்லமைதி யொன்றுங் குறையாதிருத்தலையும், நோக்குக. உலகு என்பதன் விரித்தலே ‘உலகம்’.

உலகம் என்னும் சொல்வடிவு, வடமொழியில் ‘லோக’ என்றும், சூரசேனிப் பிராகிருத வழிவந்த இந்தியில் ‘லோக்’என்றும், திரியும்.

சவை - லோக்ஸபா.

தமிழுக்கு அடுத்து வடபால் வழங்குவதால் வடகு (வடுகு) என்று பெயர்பெற்ற தெலுங்கில், உலகம் என்னும் தமிழ்ச்சொல் லோகமு என்று திரிந்துள்ளது. இது தெலுங்கியல் பென்பது, உரல்- தெ. ரோலு என்னும் திரிபால் அறியப்படும்.