பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) பிற்காலச் சேண் வடமொழியாகிய சமற்கிருதத்தில், லோகமு என்னுந் தெலுங்க வடிவு ஈறுகெட்டு ‘லோக' என்றாயிற்று. இங்ஙனம் ஈறு கெடுவது சமற்கிருத வியல்பே.

-

ஒ.நோ : அம்பலம் – அம்பர, அரங்கம் – ரங்க, கடுகம் – கடுக (t), காலம்- கால, குடும்பம்- குடும்ப(t), சகடம் - சகட (t), சங்கம் (சங்கு)- சங்க (nkh), தண்டம் - தண்ட (d -), தானம் – தான (d -), திடம் - த்ருட (drdha), நகரம் – நகர (g), நாகரிகம் - நாகரிக (- g –), நாகம் g

_

நாக (g), நாடகம் – நாடக (t), நீலம் – நீல, நீரம் – நீர, பக்கம் நீர, பக்கம் – பக்ஷ, பாகம் – பாக (bhāga), பூதம் (பெரும்பேய்) – பூத (bh), மங்கலம்- மங்கல, மண்டபம் மண்டப(p), மண்டலம்– மண்டல, மீனம்- மீன, முகம்- முக(kh), மாதம் மாஸ, வாலம்- வால.

_

இவையும் இவைபோன்ற பிறவும் வடமொழி யென்னும் சமற்கிருதத்திற்கு இன்றியமையாதனவா யிருப்பதால், வடமொழி யாளர் தமிழரின் பேதைமையைப் பெரிதும் பயன்படுத்தி, சமற்கிருதம் தேவமொழியாதலால், அதிலுள்ள சொற்களெல்லாம் அதற்குரியனவே யென்றும், தமிழே சமற்கிருதத்தினின்று தனக்கின்றி யமையாத அடிப்படைச் சொற்களையெல்லாம் கடன் கொண்டுள்ள தென்றும், தொன்றுதொட்டுத் துணிச்சலுடன் ஏமாற்றி வந்திருக் கின்றனர்.

சமற்கிருதம் தேவமொழியென்பது, பிராமணன் நிலத்தேவன் (பூசுரன்) என்பதையே முற்றுந்தழுவிய தென்றும், சமற்கிருதச் சொற்களில் ஐந்தி லிருபகுதி தூய தமிழென்றும், அறிதல் வேண்டும்.

கடன்கொண்ட தமிழ்ச்சொற்களை யெல்லாம் சமற்கிருதச் சொல்லென்று காட்டற்கு, பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் குறிக்கோட் சொற்பிறப்பியலையே (Tendentious Etymology) வடமொழியாளர் கையாண்டு வந்திருக் கின்றனர்.

லோக என்னும் சொல்லிற்கு அவர் கூறும் பொருட் கரணியம், ‘பார்க்கப்படுவது' என்பதே. லோக் என்னும் ஆரியச் சொல்லிற்குப் ‘பார்’ (look) என்பது பொருள். ஆதலால், அதை மூலமாகக் கொண்டு அங்ஙனங் கூறினர். அச் சொல் l0ok என்னும் ஆங்கிலச் சொல்லொடு தொடர்புடையது. OE. locian, OS. locon, OHG. luogen, WG. lok.

லோக் என்னும் ஆரியச் சொல் நோக்கு என்னும் தென்சொல்லின் திரிபே. நகர (னகர) லகரங்கள் ஒன்றோடொன்று மயங்கும். நோக்கு என்பது இந்தியில் தேக் என்று திரிந்துள்ளது.

உலகு (உலகம்) என்னுஞ் சொல்லிற்கு, உருண்டையானது அல்லது சுற்றிவருவது என்னும் பொருள் பொருந்துமா, அல்லது