பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

23

பார்க்கப்படுவது என்னும் பொருள் பொருந்துமா, என்று அறிஞர் கண்டுகொள்க.

உலகம் என்னும் சொல் பொதுமக்களைக் குறிப்பது பெருவழக்கு. எ - டு : உலகம் என்ன சொல்லும்?

ஒ.நோ: L. vulgus (volgus), the people, common people, the great multitude, the public.

L. vulgaris – E. vulgar, characteristic of the common people. உலவு அலவு அலவன் = வளைந்த குறடு போன்ற முன் கால்களையுடைய நண்டு.

‘அரணை

அலவு - அலகு = 1. குறடு. 2. குறடுபோன்ற தாடை. அலகைப் பேர்த்துவிட்டான். 3. தாடை போன்ற அரணைக் கொடிறு. அலகு திறக்கிற தில்லை” (பழ.).

அலகு– அலக்கு = துறடு, துறட்டி.

அலகு-அலக்கு

உல்- உள்- உழல், உழலுதல் = 1. சுழலுதல் (பிங்.). 2. அலைதல், திரிதல், “ஆட்பார்த் துழலு மருளில்கூற் றுண்மையால்” (நாலடி. 20). 3. இயங்குதல், வீசுதல். 'சிறுகாற் றுழலும்” (கல்லா. கண.). 4. நிலைகெடுதல். அந்தக் குடி உழன்றுபோயிற்று.

உழல் - உழலை = 1. சுற்றிவரும் செக்குலக்கை. 2. சுழலும் குறுக்குமரம். 'உழலை மரத்தைப்போற் றொட்டன” (கலித். 106). 3. கணைய மரம். "வேழம்... உழலையும் பாய்ந்திறுத்து” (பு. வெ. 12, வென்றிப். 8). 4. மாட்டின் கழுத்திற் கட்டும் உழலைக் கழுந்து.

உழற்சி = 1. சுழற்சி. 2. அலைகை.

உழற்றல் = (செ. குன்றா வி.) 1. சுழற்றுதல். 2. அலையச் செய்தல். “என்னை யவமே யுழற்றி” (திருக்கோ. 100, உரை, அவ.). (செ. கு. வி.) கைகால் நோவாற் புரளுதல்.

உழன்றி = மாட்டின் கழுத்திற் கட்டும் உழலைக் கழுந்து.

உழிதல் = அலைதல். “உழிதலை யொழிந்துளருமையுந் தாமுமே' (தேவா. 553 : 10).

உழிதருதல் = அலைதல். "உன்மத்த மேற்கொண் டுழிதருமே” (திருவாச. 5:7).

_

=

உல் - உர் - உருள். உருள்தல் 1. தொடர்ந்து புரளுதல். 'திண்வரை யுருள்கிலேன்” (திருவாச. 5 : 39). 2. உருண்டு திரளுதல். சிலந்திக் கட்டி உருண்டு வருகிறது. 3. புரண்டழிதல். “உலகெலா முருளு மின்றென” (சீவக. 2452). 4. செல்லுதல். “நூல்வழி யுருள்விலா