பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்)

இற- இறை = 1. இறவாணம். 'குறியிறைக் குரம்பை” (புறம். 129). 2. மூலை. “முடங்கிறை” (முல்லைப். 87). 3. வளைந்த (பெண்டிர்) முன்கை. “எல்வளை யிறையூரும்மே” (கலித்.). 4. இறகு (பிங்.). 5. சிறகு. இறைதல் = வணங்குதல். வணங்குதல். இணையடி யிறைமின் 6 (பதினோ.

ஆளு. திருக்கலம். 48).

இறை இறைஞ்சு. இறைஞ்சுதல் = 1. வணங்குதல். “எழிலார் கழலிறைஞ்சி” (திருவாச. 1 : 21). 2. தாழ்தல். 1:21). : “குலையிறைஞ்சிய கோட்டாழை” (புறம். 17). 3. வீழ்ந்து கிடத்தல். “புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி” (கலித். 3: 13).