பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

தலைமைத் தமிழ் (தமிழின் தலைமையை நிலைநாட்டும் சொற்கள்) உண்ணம் = நெருப்பு, வெப்பம். “உண்ண வண்ணத்

உள்- உண்

தொளிர்நஞ்ச முண்டு” (தேவா. 510 : 6).

உண்ணம்– வ. உஷ்ண. மரா. ஊன்பாணி = வெந்நீர்.

உண் - உண. உணத்தல் = காய்தல், புலர்தல்.

உண- உணத்து (பி.வி.) உணத்துதல் = 1. காயவைத்தல். நெல்லை யுணத்தினாள். 2. ஈரம் புலர்த்துதல், தலையை யுணத்து. 3. வற்றலாக்குதல், வற்றுவித்தல். “மெய் யுணத்தலும்” (தைலவ. தைல. 140).

உண- உணங்கு. உணங்குதல் = 1. உலர்தல். “தினை விளைத்தார் முற்றந் தினையுணங்கும்” (தமிழ்நா. 154). 2. மெலிதல். “ஊட லுணங்க விடுவாரோடு” (குறள். 1310). 3. மனம் வாடுதல். “உணங்கிய சிந்தையீர்” (கந்தபு. மோன. 21). 4. சுருங்குதல். “உணங்கரும் புகழ்” (காஞ்சிப்பு. நாட்டுப். 1). 5. செயலறுதல். “உணங்கிடுங் கரண மென்னில்” (சி.சி. 4 :

7).

௧. ஒணகு.

கெடுதல்.

உணங்கு உணக்கு (பி.வி.). உணக்குதல் = 1. உலர்த்துதல். "தொடிப்புழுதி கஃசா வுணக்கின்” (குறள். 1037). 2. “உணக்கினான்.... என் வாழ்க்கை” (விநாயகபு. 80 :120).

ம. உணக்கு. உணங்கு

உணங்கல்

=

I. 1. உலர்த்திய தவசம். “உணங்கல் கெடக்கழுதை யுதட்டாட்டங் கண்டென் பயன்” (திவ். திருவாய். 4:6:7). 2. வற்றல். “வெள்ளென் புணங்கலும்” (மணிமே. 16 : 67). 3. சமைத்த வுணவு. “ஓடுகை யேந்தி.... உணங்கல் கவர்வார்” (தேவா. 1030 : 3). 4. உலர்ந்த பூ (பிங்.).

உணக்கு- உணக்கம் வாட்டம் (W.).

=

ம. உணக்கம், க. ஒணகிலு (g), து. ஒணகெலு.

உள்

அள்

அழு அழல் 1. நெருப்பு. 2. வெப்பம். 3. ஒளிவிளக்கம். 4. துளங்கொளி (கேட்டை). 5. செவ்வாய். 6. நரகம். 7. காந்தல், உடம்பெரிவு. 8. எருக்கு. 9. நஞ்சு. 10. உறைப்பு. 11. சினம்.

ம. அழல்.

அழல்தல் = 1. எரிதல். 2. விளங்குதல், திகழ்தல். 3. காந்துதல். 4. உறைப்பாதல். 5. சினத்தல். 6. பொறாமைப்படுதல்.

=

°

அழல் வண்ணன் = சிவன் (தேவா. 1055: 5).