பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

37

இலத்து- இலத்தி- இரத்தி = இலந்தை. "இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து” (புறம். 34 : 12).

இல்- இர்- இராகி = சிவந்த கேழ்வரகு. ம., க., தெ., து. ராகி (g).

இல் - எல் = 1. ஒளி. "எல்லே யிலக்கம்” (தொல். இடை. 21). 2. கதிரவன். “எற்படக் கண்போல் மலர்ந்த” (திருமுருகு. 74). 3. வெயில் (பிங்.). 4. பகல். “எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி” (புறம். 170). 5. நாள் (பிங்.). 6. வெண்மை.

எல் - எல்லி = 1. கதிரவன் (பிங்.). 2. பகல். “இரவொ டெல்லியு மேத்துவார்” (தேவா. 344 : 8).

எல்- எல்லோன் = கதிரவன் (பிங்.).

_

-

எல் – எல்பு – என்பு = 1. வெள்ளையான எலும்பு. “என்பிலதனை வெயில்போலக் காயுமே” (குறள். 77). 2. எலும்போடு கூடிய உடம்பு. “என்பு முரியர் பிறர்க்கு” (குறள். 72).

ஒ.நோ : அல் + பு = அன்பு. அல்லுதல் = பொருந்துதல்.

நல் - (நல்பு)- நன்பு, வல்-(வல்பு)- வன்பு.

எல்பு- எலுபு- எலும்பு = வெள்ளையான உறுப்பு.

ம. எலும்பு, க., து. எலு, தெ. எம்மு.

எல்பு–L. albus, white, LL. alba, white.

E. alb, white vestment reaching to feet, worn by priests.

OE., ME. albe.

E. albata, white metal. L. albata, whitened.

Port. albino, white Negro.

E. albite, white or soda fieldspar.

E. album, book of white sheets for insertion of autographs,

photographs, etc.

E. albumen, white of egg.

E. albuminuria, presence of albumen in the urine.

E. alburnum, recently formed white wood in exogamous trees.