பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

E. can, to know, to know how to, to be able.

G., Ice., Goth. kann.

Cf. AS. cunnan, to know, to know how to do, to be able.

Ice. kunna, to know, to be able.

Sw. kunna to know, to be able.

Dan. kunde to know, to be able

45

முதற்கண், 'கான்' (con, kon) என்னும் தியூத்தானியச் சொல் முதலெழுத்துயிர் முன் பின்னாக முறைமாறி ‘க்னா' (cna, kna) என்றும் ‘க்னோ’ என்றும் திரிந்தது.

AS cnāwan, Ice. knā, ON. kna, ME. knowen, E. know, OHG. chnaan, cnahan.

ககரம் சில மொழிகளில் 'ga' என்னும் எடுப்பொலியாக (voiced sound) மாறுகின்றது.

L. gna; gnarus, knowing, having knowledge of, acquainted with; OIrish gnāth, known, accustomed, W. gnawd, a custom.

கிரேக்கத்தில் இவ் வெடுப்பொலிக் ககரம் (ga) இரட்டிக்கின்றது. Gk. gignnēsko.

சமற்கிருதத்தில் எடுப்பொலிக் ககரம் (ga) ஜகரமாகத் திரிகின்றது. Skt. jnā (ஜ்ஞா). g-j, ந- ஞ, போலித்திரிபு.

வ. ஜ்ஞான- இந். ஜான்.

ஜகரம் சில மொழிகளில் ஸகர எடுப்பொலியாக (za) மெலிந்து விடுகின்றது.

Russ. znate, to know; Pers. far - zān, knowledge.

இவ் வெல்லாத் திரிபுகட்கும் மூல வேர் GEN (கென்) எனக் குறிக்கின்றார் கீற்று (Skeat).

மேலையர் இன்னும் மொழிகளைச் சரியாய் ஆராயவில்லை. இற்றை அறிவியல்களெல்லாம் மேலையர் கண்டவையே. ஆயின், மொழிகள் வரலாற்றிற்கு முந்திய பண்டைக் காலத்தன வாதலால், அவர்களின் ஆராய்ச்சிக் குட்பட்ட தன்று. பொறிக்கருவிகள் எத்துணைச் சிறந்தனவாயினும் மாந்தன் கையாளாவிடின் இயங்கா; இயக்கிய பின்பும் இறுதிவரை மாந்தன் உடனிருத்தல் வேண்டும். துலையுங் கணிப்பானும் கெட்டிருப்பின் தவறான நிறையுங் கணக்குங்