பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

55

கரி - கார்- காரம் = 1. உறைப்பு (சூடா.). 2. கார்ப்புப்பு (W.). 3. சாம்பலுப்பு. 4. சீலைக்காரம். 5. சாயக்காரம். 6. சீனிக்காரம். 7. வெண்காரம். 8. அக்கர காரம். (தைலவ. தைல. 112). 9. ஒரு செயற்கை நஞ்சு (கோளக பாடாணம்) (சங்.அக.). 10. திருநீறு. “காரமென் றுரைப்பர்” (திருக்காளத். பு. 26 : 4). 11. சினம். அவன் என்மீது காரமாயிருக்கிறான்.

காரசாரம் = 1. வேண்டிய அளவாக அமைத்த காரச்சுவை. “கார சாரஞ்சேர்சாற்றிலே கலந்த சோற்றிலே” (அருட்பா. VI, அவாவறுப்பு, 2). 2. வினைத்திறமை. அவன் பேச்சில் ஒன்றுங் காரசாரமில்லை.

கார மருந்து = 1. பிள்ளை பெற்ற பெண்களுக்குக் கொடுக்கும் காரமருந்து. 2. தோலை எரித்துத் தின்னும் மருந்து.

கார்- கார்த்தல் = உறைத்தல் (பிங்.).

=

கார்- கார்ப்பு = உறைப்பு (சூடா.).

காரம்- வ.க்ஷார. இத் திரிவைச் சென்னைப் பல்கலைக்கழகத்தமிழ் அகரமுதலி(Lexicon) தலைமாற்றிக் குறிக்கின்றது.

ம. காரம், தெ. காரமு, க., து. கார.

காள்- காய். ஒ. நோ : மாள்– மாய்.

காய்தல் = (செ. கு. வி.) 1. வெயில் எறித்தல். கதிரவன் எரிதல். வெயில் காய்கிறது. 2. நீர் முதலியன காய்ச்சப்படுதல். வெந்நீர் காய்கிறது. 3. சுடுதல். அவனுக்கு உடம்பு காய்கிறது. 4. ஒளி வீசுதல். நிலாக் காய்கிறது. 5. பசித்தீயால் வருந்துதல். காலையிலிருந்து எனக்கு வயிறு காய்கிறது. 6. விடாய்த்தல். “காய்தலு முண்டக் கள்வெய் யோனே” (புறம். 2 : 8). 7. பொருள் உலர்தல். புழுங்கல் காய்கிறது. 8. புண் ஆறுதல். புண் காய்ந்து வருகிறது.

(செ. குன்றா வி.) 1. எரித்தல். “மதவேள் தன்னுடலங் காய்ந்தார்” (தேவா. 15 :6), ‘காமனைக் காய்ந்த கண்ணன்’ 2. அழித்தல். “கஞ்சனைக் காய்ந்தானை” (திவ். பெரியதி. 7: 6 : 5). 6 : 3. விலக்குதல். “கோப முதலிய குற்றங் காய்ந்தார்” (பெரியபு. அப்பூதி. 2). 4. வெகுளுதல். “காய்தலு முவத்தலும்” (தொல். கற்பு. 6). 5. கடிந்து கூறுதல். “கறுத்தெழுந்து காய்வாரோடு” (நாலடி. 315). 6. வெறுத்தல். "காய்த லுவத்த லகற்றி யொருபொருட்க ணாய்தல் (அறநெறி. 22). 7. வருத்துதல். “காய்கின்ற பழவினை போம்” (குற்றா. தல. நூற்பய. 15).

6

ம., க. காய், தெ. காயு, து. காயி.