பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

7. காலம்

59

தமிழுக்கு

அடிப்படையானதும்

இன்றியமையாததுமான

சொற்களுள் ஒன்று காலம். ஆயின், ஆராய்ச்சியில்லாதவர் அனைவரும் நம்புமாறு, இதை வடசொல்லென்று சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலி குறிக்கின்றது. ஆயினும்,

6

“காலம் உலகம் உயிரே உடம்பே

பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா வுயர் திணை மேன”

(சொல். கிளவி. 58)

என்று தொல்காப்பியங் கூறுகின்றது.

இனி,இதுவுஞ் சான்றாகாவாறு,

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே’”

(சொல்.எச்ச. 1)

என்னுந் தொல்காப்பிய நூற்பாவையே, ஒருவர் எடுத்துக் காட்டலாம்.

ஆதலால், இதைத் தென்சொல்லேயென்று நாட்டற்குத் தொன்றுதொட்ட ஆட்சியொடு அறிவியன் முறைப்பட்ட வேர்ச் சொல்லாராய்ச்சியும் இன்றியமையாததாகின்றது.

தமிழில், குறுங்காலத்தைக் குறிக்க அமையம், ஏல்வை, கால், சமையம், செவ்வி, ஞான்று, நேரம், பொழுது, வேளை முதலிய பல சொற்கள் உள்ளன. ஆயின் நெடுங்காலத்தைக் குறிக்கக் காலம் என்னும் ஒரே ரே சொல் உள்ளது. இதற்கு அடிமூலம் கோல் என்பதே; இதன் அடிப்பொருள் திரட்சி என்பதே. உருட்சி, கூடல் என்னும் இரு கருத்தினின்றும் திரட்சிக் கருத்துப் பிறக்கும். இவ் விரு வழியும் கோற்சொல்லிற் கேற்கும்.

குல் - குல - குலவு. குலவுதல், = கூடுதல், வளைதல்.

குல் - கொல் - கோல் = திரட்சி. “கோனிற வளையினார்க்கு” (சீவக. - =

209)