பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 45.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிச்சொற்கள்

65

Calculus என்பது சிறுகல் என்று பொருள்படும் இலத்தீன் சொல். பண்டைக் காலத்திற் சிறு கூழாங்கற்களைக் கொண்டு எண்ணிப் பழகியதனால், calculate என்னும் வினைச்சொல் தோன்றிற்று. L. calx கல். - Gk. khalis, L. culus என்பது சிறுமைப் பொருளீறு (dim. suf.) இஃது எல்லா ஆங்கில அகரமுதலிகளிலும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, காலம் என்னும் சொல்லிற்கு calculate என்னுஞ் சொல் மூலமாகாது.

கூழாங்கற்களைக் கொண்டு எண்ணிப் பழகிய காலத்திற் கணிக்கப்பட்டவை, காய்கறிகளும் காசும் போன்ற காட்சிப் பொருள்களேயன்றி, காலமும் நாளும் போன்ற கருத்துப் பொருள்களல்ல.

தமிழிற்போல் கால், காலை என்ற சொற்கள் வடமொழியில் இல்லை. இவ் விருசொற் போன்றே காலம் என்னும் சொல்லும் தமிழில் அடிப்படைச் சொல்லாகத் தொன்றுதொட்டு இருவகை வழக்கிலும் வழங்கி வருகின்றது. கால் - காலம். ஒ. நோ. : வால்– வாலம். காலம்.ஒ.நோ. -

உலக வழக்கு

காலக் கொடுமை, காலங் கண்டவன், காலங் கடத்தல், காலங் கடத்துதல், காலங்கழிதல், க காலங்கழித்தல், காலங்காட்டி, காலங்காலத்தாலே, காலங்கிட்டுதல், காலங்கூடுதல், காலங் கூடி வருதல், காலங் கெடுதல், காலஞ்செய்தல், காலஞ்செல்லுதல், காலஞ்சொல்லி, காலத்தாலே, காலத்தின் கோலம், காலந்தள்ளுதல், காலந்தாழ்தல், காலந்தாழ்த்தல், காலப் பயிர், காலம் பண்ணுதல், காலம் பார்த்தல், காலம் பெற, காலம் போதல், காலம் போக்குதல், காலமல்லாக் காலம், கால மழை, காலமறிதல், காலமாதல், காலம் மாறுதல், கால மெல்லாம், கால வரம்பு, கால வரையறை, கால வழக்கம்;

அந்தக் காலம், இந்தக் காலம், எந்தக் காலம், ஆங்காலம், போங்காலம்,வருங்காலம், ஆயிரங்காலத்துப் பயிர், ஊறுகாலம், நல்ல காலம், கெட்ட காலம், கேடு காலம், நீண்ட காலம், பஞ்சகாலம், பனிக்காலம், பேறுகாலம், போனகாலம், வந்த காலம், மழை காலம், வெயிற்காலம்.

பழமொழிகள்

காலஞ் செய்கிறது ஞாலஞ் செய்யாது.

காலத்திற் கேற்ற கோலம்.